மேற்கத்திய நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தையை தடுக்க முயற்சிக்கின்றன! ரஷ்யா பகிரங்க குற்றச்சாட்டு
ட்ரம்ப் மற்றும் புடின் வகுத்த செயல்முறையை சீர்குலைக்க முயற்சிகள் நடந்து வருவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குற்றம்சாட்டியுள்ளார்.
தலைவர்கள் சந்திப்பு
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்திப்பதற்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை கோரியிருந்தார்.
ஆனால், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இரண்டு நாடுகளின் தலைவர்கள் இடையே சந்திப்பு எதுவும் திட்டமிடப்படவில்லை என்று கூறினார்.
இந்த நிலையில், உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டுவர ட்ரம்பும், புடினும் செயல்முறைகளை வகுத்துள்ளனர். ஆனால் மேற்கு நாடுகள் அவற்றை சீர்குலைக்க முயற்சிக்கின்றன என லாவ்ரோவ் குற்றம்சாட்டியுள்ளார்.
சாக்குப்போக்கைத் தேடுகிறார்கள்
இதுதொடர்பாக அவர் கூறுகையில், "மேற்கத்திய நாடுகள் உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதிப் பேச்சுவார்தைகளை தடுக்க முயற்சிக்கின்றன. இது ஒரு பரபரப்பான இராஜதந்திர நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தியதாகத் தோன்றியது. பேச்சுவார்த்தைகளை தடுக்க அவர்கள் ஒரு சாக்குப்போக்கைத் தேடுகிறார்கள். இந்த முயற்சிகள் முறியடிக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜெலென்ஸ்கி எப்படியாவது புடினுடன் உடனடி சந்திப்பைக் கோர வேண்டும் என்று பிடிவாதமாக வலியுறுத்தினார், நிபந்தனைகளை விதித்தார் எனவும் லாவ்ரோவ் குறிப்பிட்டார்.
முன்னதாக, உக்ரைனில் ஐரோப்பிய துருப்புகளின் எந்தவொரு இருப்பும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ரஷ்யா கூறியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |