ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400
அமெரிக்காவின் சிறந்த ஆயுதங்களில் ஒன்றாக நம்பப்படும் Patriot ஏவுகணைகளை ரஷ்யாவின் S-400 பாதுகாப்பு அமைப்பு எளிதாக தடுத்து வருகின்றன.
உக்ரைனில் நடைபெற்றுவரும் போர் சூழலில் ரஷ்யா தனது Su-35 போர் விமானங்களை பாதுகாக்க S-400 எனும் அதிநவீன பாதுகாப்பு அமைப்புகளை பயணப்படுத்திவருகிறது.
இந்த S-400 அமைப்புகள், அமெரிக்கா வழங்கிய Patriot மற்றும் உக்ரைனின் பழைய S-200 போன்ற ஏவுகணைகளை தடுக்கின்றன.
இந்த பாதுகாப்பு வலையமைப்பு காரணமாக ரஷ்யா விமானங்கள் பாதுகாப்பாக செயல்பட்டு, உக்ரைனின் ஆழமான பகுதிகளுக்குச் சென்று தாக்குதல் நடத்த முடிகிறது.
குறிப்பாக கிழக்கு உக்ரைனில், ரஷ்ய விமானங்கள் மேற்கத்திய ஆதரவாளர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்திவருகிறது.
ரஷ்யாவின் S-400 ஏவுகணைகள் மிக வேகமாக வரும் ஏவுகணைகளை தடுக்கும் திறன் கொண்டவை. இதனால், அமேரிக்கா வழங்கிய ஏவுகணைகள் கூட ரஷ்ய விமானங்களை தடுக்க முடியாமல் அழிக்கப்படுகின்றன. இது உக்ரைனுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Russia S-400 air defense, Ukraine war missile systems, Patriot vs S-400 comparison, Russian fighter jet protection, US missiles Ukraine failure, S-400 Triumf performance, Ukraine conflict latest news, Russia military technology