ரஷ்யா அமைத்துள்ள 10 ரகசிய இராணுவ தளங்கள் - நேட்டோவுக்கு புதிய அச்சுறுத்தல்
Russia's secret bases leak NATO targets: ரஷ்யாவின் புதிய ரகசிய இராணுவ தளங்கள் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன.
10 புதிய ட்ரோன் தளங்கள்
உக்ரைன் மற்றும் பெலாரஸ் எல்லைப் பகுதிகளில் ரஷ்யா குறைந்தது 10 புதிய ட்ரோன் தளங்களை அமைத்துள்ளதாக The Telegraph வெளியிட்ட விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
செயற்கைக்கோள் படங்கள் மற்றும் கசிந்த ஆவணங்களின் அடிப்படையில், 59 புதிய launch rails கண்டறியப்பட்டுள்ளன.

1,000 கிலோமீட்டர் தாக்கும் திறன்
இதில் சுமார் 20 launch rails நீளமானதாக இருந்து, ரஷ்யாவின் புதிய நீண்ட தூர தாக்குதல் ட்ரோன்களை ஏவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ட்ரோன்கள் 1,000 கிலோமீட்டர் தூரம் வரை தாக்கும் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், நேட்டோவின் சில பகுதிகள், குறிப்பாக போலந்து தலைநகர் வார்சா வரை ரஷ்யாவின் தாக்குதலுக்குள் வரக்கூடும்.
இந்த 10 தளங்களில் 7 தளங்கள், சமீபத்தில் உக்ரைன் தலைநகர் கீவ் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டதாக open-source tracking data மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நேட்டோவுக்கு புதிய அச்சுறுத்தல்
மற்ற தளங்கள் இன்னும் விரிவாக்கப் பணியில் உள்ளன. ரஷ்யா தனது தாக்குதல்களை நிலப்பரப்பைத் தாண்டி, வான்வழி ட்ரோன் தாக்குதல்களால் விரிவாக்கும் நோக்கில் இந்த தளங்களை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.
நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு திட்டங்களில் இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கின்றனர். இந்த தகவல் கசிவு, ரஷ்யா-நேட்டோ மோதலின் தீவிரத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |