கிட்ட வந்து உரசாதே.. தள்ளிப்போ! மோசமாக நடந்துகொண்ட இந்திய வீரரின் வீடியோ
இந்திய கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தன்னுடன் செல்பி எடுக்க வந்த மைதான ஊழியரை தள்ளிப்போ என்று கூறிய வீடியோ கண்டனங்களை பெற்றுள்ளது.
இந்திய-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி நேற்று நடந்தது.
மழை காரணமாக 3.3 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக மழை குறுக்கிட்டபோது இந்திய அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் டக்அவுட்டில் அமர்ந்திருந்தார்.
அப்போது அவரது அருகில் வந்து அமர்ந்து மைதான ஊழியர் ஒருவர், அவருடன் செல்பி எடுக்க முயன்றார். ஆனால், தன்னை உரசி அமர்ந்த அந்த ஊழியரை தள்ளிப்போ என்று கூறி கையால் தள்ளிய கெய்க்வாட், வேறு எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தார்.
— Rohit_45 Fan Club (@Rohit__FanClub) June 19, 2022
எனினும் அந்த ஊழியர் செல்பி எடுக்க முயற்சி செய்தபோது, கெய்க்வாட் அவரை கண்டுகொள்ளவே இல்லை. இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில், பலரும் கெய்க்வாட்டின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தனி மனிதரை அவமதிக்கும் செயல் என கூறி இணையத்தளங்களில் நெட்டிசன்கள் வீடியோ வைரலாக்கி வருகின்றனர்.
IND?? vs SA??
— Jeet Singh (@jeet_singh070) June 19, 2022
Match no. 5 ?
Chinnaswamy Stadium, Bangaluru ?️
Match delayed due to rain ?️
Why the heck Ruturaj Gaikwad behaving like this with ground staff? Just for a selfie he is being arrogant towards him. This kind of behaviour is really unacceptable in gentleman's game. pic.twitter.com/A1sjqnMQu7