நடுவானில் விமானத்தில் இளம் பெண் செய்த செயல்! அதிர்ந்து போன சக பயணிகள்: வெளியான முழு வீடியோ
இத்தாலியில் பயணிகள் விமானத்தில் பெண் ஒருவர் முகக்கவசத்தை சரியாக அணிய மறுத்து சக பயணிகளை தாக்கி வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மே 26ம் திகதி இத்தாலியின் Ibiza நகரத்திலிருந்து Milian நகரத்திற்கு பயணித்த ரயன்ஏர் பயணிகள் விமானத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது.
விமானத்திற்குள் கொரோனா பரவலை தடுக்க அனைத்து பயணிகளையும் முகக்கவசம் அணியுமாறு விமானக்குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.
இளம் பெண் ஒருவர் மட்டும் முகக்கவசத்தை மூக்கு மற்றும் வாயை மறைக்காமல் கன்னத்தில் அணிந்திருந்துள்ளார்.
இதைக்கண்ட பயணி ஒருவர் முகக்கவசத்தை சரியாக அணியுமாறு பெண்ணிடம் கூறியுள்ளார், இதற்கு மறுத்த பெண் அந்த பயணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து மற்ற பயணகளும் முகக்கவசத்தை அணியுமாறு வலியுறுத்தியுள்ளனர், எனினும் யார் பேச்சையும் கேட்காத இளம், அருகிலிருந்த பெண்ணின் தலைமுடியை இழுத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.
பின் விமானக் குழுவினரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நடுவானில் விமானத்தில் அராஜகம் செய்த இளம்பெண்ணை பார்த்து சக பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Milian நகரில் விமானம் தரையிறங்கிய உடன் விமானக்குழுவினர் அராஜகத்தில் ஈடுபட்ட பெண்ணை இழுத்துச்சென்று பொலிஸிடம் ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவம் முழுவதையும் விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
விமானக்குழுவினர் இழுத்துச்செல்லும் போது சக பயணி ஒருவரை அப்பெண் உதைக்கும் காட்சி வீடியோவில் பாதிவாகியுள்ளது.
தற்போது இச்சம்பவம் குறித்து உள்ளூர் பொலிஸ் நடவடிக்கை எடுக்கும் என ரயன்ஏர் விமானம் நிறுவனம் தெரிவித்துள்ளது.