ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி பயன்படுத்துவது குறித்து தென் கொரியா எச்சரிக்கை!
வயதானவர்களுக்கு Oxford-Astrazeneca தடுப்பூசி போடுவது குறித்து தென் கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. தரவு இல்லாததைக் காரணம் காட்டி, 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு Oxford-Astrazeneca தடுப்பூசியைப் பயன்படுத்துவது குறித்து தென் கொரிய ஆலோசகர்கள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளதாக, அந்நாட்டு உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பா பரிந்துரைத்தபடி, 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த மருந்தை வழங்க குழு அறிவுறுத்தியது, ஆனால் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முடிவு குறித்து எச்சரிக்கையுடன் அறிவுறுத்தியது, ஏனெனில் போதுமான தகவல்கள் இதுவரை சேகரிக்கப்படவில்லை என்று அதிகாரி Lee Dong-hee கூறினார்.
பல ஐரோப்பிய நாடுகள் Oxford-Astrazeneca தடுப்பூசியை இளையவர்களுக்கு மட்டும் போட திட்டமிட்டுள்ளன.
Oxford-Astrazeneca தடுப்பூசி செயல்திறன் குறித்த போதிய தரவு இல்லாததால் வயதானவர்களுக்கு போடுவது குறித்து ஐரோப்பிய நாடுகள் பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாதை அடுத்து தென் கொரியா இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
20 மில்லியன் டோஸ்களை இரண்டு முறையாக கொள்முதல் செய்ய போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்த மாத தொடக்கத்தில் Oxford-Astrazeneca தடுப்பூசியின் முதல் விநியோகத்தை தென் கொரியா பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வயதானவர்களுக்கு இது ஒரு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது என்று Astrazeneca மற்றும் தடுப்பூசிக்கான மருத்துவ பரிசோதனைகளின் தலைவர் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.