என் அப்பா எனக்கு சொன்னதை நான் அர்ஜுனுக்கு சொல்றேன்.. - சச்சின் ஓபன் டாக்!
சச்சின் டெண்டுல்கர்
இந்திய கிரிக்கெட் உலகில் ஜாம்பவனாக வலம் வந்தவர் சச்சின் டெண்டுல்கர். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் ரசிகர்களுக்கு இந்திய கிரிக்கெட் காதலர். இன்று வரை ஒவ்வொரு இந்திய ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். 'தி லிட்டில் மாஸ்டர்' என்றும் 'மாஸ்டர் பிளாஸ்டர்' என்றம் ரசிகர்கள் இவரை அன்போடு அழைத்து வருகின்றனர்.
மனம் திறந்து பேசிய சச்சின்
இந்நிலையில், மும்பையில் நடந்த 'சின்ட்டிலேட்டிங் சச்சின்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில், என் தந்தை எனக்கு சொன்னதை நான் அர்ஜுனுக்கு சொல்றேன் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கள் மனம் திறந்து பேசியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
சின்ன வயசு இருக்கும்போது எனக்கு என் குடுத்தாரின் ஆதரவு கிடைத்தது. என் அப்பா ஒரு பேராசிரியர். என் அம்மா எல்.ஐ.சி.யில் வேலை பார்த்தார். என் சகோதரர் அஜித் எனக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதை முதல் ஆளாக நின்று தீர்த்து வைத்தார். எனக்கு பிறந்த நாள் வரும்போது என் சகோதரர் நிதின் எனக்காக ஓவியம் வரைந்து கொடுப்பார்.
நான் அனைவரிடம் ஒன்றே ஒன்று கேட்டுக்கொள்கிறேன். பெற்றோர்கள் பிள்ளைகளை சுதந்திரமாக செயல்பட விடுங்கள். எனக்கு என் பெற்றோர்கள் கொடுத்த சுதந்திரத்தை என் மகனுக்கு நான் உருவாக்க முயற்சி செய்கிறேன்.
முதலில் நம்மை நாம் பாராட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் மக்கள் நம்மை பாராட்டுவார்கள். என் அப்பா எனக்கு கொடுத்த அறிவுரையை நான் என் மகன் அர்ஜுனுக்கு சொல்கிறேன் என்றார்.