உங்கள் அரவணைப்பை விளக்க எனக்கு வார்த்தைகள் இல்லை - சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சி பதிவு
உங்கள் அரவணைப்பை விளக்க எனக்கு வார்த்தைகள் இல்லை என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் டுவிட்டரில் நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர்
இந்திய கிரிக்கெட் உலகில் ஜாம்பவனாக வலம் வந்தவர் சச்சின் டெண்டுல்கர். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் ரசிகர்களுக்கு இந்திய கிரிக்கெட் காதலர். இன்று வரை ஒவ்வொரு இந்திய ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். 'தி லிட்டில் மாஸ்டர்' என்றும் 'மாஸ்டர் பிளாஸ்டர்' என்றம் ரசிகர்கள் இவரை அன்போடு அழைத்து வருகின்றனர்.
சச்சின் தன் 16 வயதில் கிரிக்கெட் உலகில் நுழைந்தார். விளையாட்டின் அனைத்து வடிவங்களிலும் பல சாதனைகளைப் படைத்தார். சச்சின் டெண்டுல்கர் 2012ல் மும்பை வான்கடே மைதானத்தில் தனது சொந்த மைதானத்தில் ஓய்வு பெற்றார்.
சச்சின் டெண்டுல்கரின் 50வது பிறந்தநாள்
இந்நிலையில், சச்சின் டெண்டுல்கரின் கடந்த 24ம் தேதி தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு உலகம் முழுவதிலுமிருந்து வாழ்த்துகள் குவிந்தது. கிரிக்கெட் அமைப்புகள் முதல் முன்னாள் அணி வீரர்கள், களத்தில் போட்டியாளர்கள், சர்வதேச வீரர்கள் என அனைவரிடமும் சச்சின் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சி பதிவு
இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், களத்தில் நீங்கள் வெல்லும் கோப்பைகளுடன், களத்திற்கு வெளியே உள்ள நட்புகளும் வாழ்க்கையை சிறப்புறச் செய்கின்றன. உங்கள் அன்பையும் பாசத்தையும் இவ்வளவு ஏராளமாகப் பெறுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எல்லா அழகானவற்றிலும் நான் பெற்ற அரவணைப்பை விளக்க எனக்கு வார்த்தைகள் இல்லை என்று பதிவிட்டுள்ளார்.
Along with the trophies you win on the field, the friendships off the field are what make life special. To receive all your love and affection in such abundance has been very heartwarming for me. I’m short of words to explain the warmth I’ve received with all the beautiful…
— Sachin Tendulkar (@sachin_rt) April 27, 2023