ஆக்ரோஷமான அடித்த ஷாட்.,மார்போடு சேர்த்து கேட்ச்! சாய் சுதர்சனின் மிரள வைக்கும் வீடியோ
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்டில் சாய் சுதர்சன் செய்த அபார கேட்ச் இணையத்தில் பரவி வருகிறது.
மிரள வைத்த சாய் சுதர்சன்
இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.
SAI SUDHARSAN WITH A SPECTACULAR CATCH. 🤯pic.twitter.com/OsWITs9vIH
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 11, 2025
தொடக்க வீரர் ஜான் கேம்பெல் 10 ஓட்டங்களில் ரவீந்திர ஜடேஜா ஓவரில் ஆட்டமிழந்தார். ஆனால் அவர் அவுட் ஆன விதம் பலரையும் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது. ஏனெனில், ஷார்ட் லெக்கில் ஃபீல்டிங்கில் சாய் சுதர்சன் நின்றிருந்தார்.
அப்போது கேம்பெல் அடித்த ஸ்லோக் ஸ்வீப் ஷாட் மூலம் வேகமாக வந்த பந்து சாய் சுதர்சனின் மார்பில் பட, அவர் அதனை அப்படியே பிடித்துக் கொண்டார்.
நம்பமுடியாத வகையில் அமைந்த இந்த கேட்ச் அனைவரையும் மிரள வைத்தது. தற்போது இந்த வீடியோவும் வேகமாக இணையத்தில் பரவி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |