அநுரகுமார-வுக்கு வாழ்த்து தெரிவித்த சஜித் பிரேமதாச: எதிர்கட்சி பொறுப்பு குறித்து விளக்கம்
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அநுரகுமார திசாநாயக்க-வுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்து
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அநுரகுமார திசாநாயக்க நாளை பதவியேற்க உள்ள நிலையில், நாட்டை கட்டியெழுப்புவதற்கு முழு ஒத்துழைப்பும் வழங்க தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்து அறிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து ஊடகங்களுக்கு அளித்த கருத்தில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில், “ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அனுரகுமார தரப்புக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எதிர்க்கட்சி பொறுப்பு
மிகவும் நெருக்கடியான காலகட்டமொன்றில் இலங்கை நல்ல பாதையை நோக்கி வழிநடத்துவதற்கான ஆற்றல் அனுரகுமார தரப்புக்கு கிடைக்க வேண்டும்.
அதே நேரம் வெற்றி பெற்றுள்ளவர்கள் மட்டுமே நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்பதோ அதற்கான பொறுப்பு மற்றவர்களுக்கு இல்லை என்பதோ இல்லை.
மேலும் நாட்டை கட்டியெழுப்புவதற்கு முழு ஒத்துழைப்பும் வழங்க எதிர்க்கட்சி என்ற வகையில் புதிய ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பினை வழங்கும்” என்றும் அறிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |