ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் ஒவ்வொரு இந்திய வீரர்களுக்கும் கார் பரிசு: தொழிலதிபர் அறிவிப்பு
பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்துவரும் நிலையில் இந்திய வீரர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படும் என்று தொழிலதிபர் அறிவித்துள்ளார்.
இந்திய வீரர்களுக்கு கார் பரிசு
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 100 -க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.
இந்திய அணி சார்பில் இதுவரை 3 வெண்கல பதக்கம் பெறப்பட்டுள்ளது. தனிநபர் பிரிவில் மனு பாக்கர் மற்றும் ஸ்வப்னில் குசாலே ஆகியோரும், கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் மற்றும் ஸ்வப்னில் குசாலே ஆகியோரும் வெண்கல பதக்கம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், தொழிலதிபரும், ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் தலைவருமான சஜ்ஜன் ஜிண்டால் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் ஒவ்வொரு இந்திய வீரர்களுக்கும் கார் பரிசாக வழங்கப்படும் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
நம்முடைய வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் வெற்றிக்காக சிறப்பானதை பெறுவதற்கு அவர்கள் தகுதியானவர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
இவரின் ஜேஎஸ்டபிள்யூ குழுமத்துடன் இணைந்து மோரிஸ் காரேஜஸ் இண்டியா என்ற நிறுவனமானது எம்ஜிவிண்ட்சர் (MG Windsor) என்ற சொகுசு காரை தயாரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |