பிரபல நாட்டில் போலி Pfizer தடுப்பூசிகள் விற்பனை; 6 பேர் கொண்ட கும்பல் கைது
போலி கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை தயாரித்து விற்பனை செய்ததாக வடக்கு மெக்சிகோவில் பொலிஸார் 6 பேரை கைது செய்துள்ளனர்.
வடக்கு மெக்ஸிகோவில் Nuevo Leon பகுதியில் இந்த கும்பல் பிடிபட்டுள்ளது.
இந்தப் போலி தடுப்பூசிகள் பிரபல அமெரிக்க நிறுவனமான Pfizer பெயரில் லேபிள் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் ஒரு டோஸை 2000 டொலருக்கு விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது.
மெக்ஸிகோவில் இந்த பெருந்தொற்றுக்கு மத்தியில் சில கிரிமினல் கும்பல்கள் மருந்துகள், ஆக்சிஜென், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவைகளை திருடியதாக கூறிய அதிகாரிகள், போலி மருந்துகளை தயாரித்து விற்பனை செய்துள்ளது இதுவே முதல்முறை என கூறுகின்றனர்.
இந்த போலி தடுப்புமருந்தில் என்ன மருந்து உபயோகப்படுத்தப்பட்டுள்ளது, அவை எங்கெல்லாம் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணை நடந்துவருகிறது.
மெக்ஸிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,075 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், மொத்த இறப்பு எண்ணிக்கை 177,061-ஆக உயர்ந்துள்ளது.
அந்நாட்டில் இப்போது 1 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்கபட்டுள்ளது, ஆனால் 750,000 முன்னணி சுகாதார ஊழியர்களுக்கு இன்னும் முழுமையாக தடுப்பூசி போடவில்லை என கூறப்படுகிறது.