டிராவிட்டின் 26 ஆண்டு கால உலக சாதனையை முறியடித்த பாகிஸ்தான் வீரர் சல்மான் ஆகா
டிராவிட்டின் 26 ஆண்டு கால உலக சாதனையை பாகிஸ்தான் வீரர் சல்மான் ஆகா முறியடித்துள்ளார்.
பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே பங்குபெறும் முத்தரப்பு T20 தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.

4 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், 3 போட்டிகளில் பாகிஸ்தானும், ஒரு போட்டியில் ஜிம்பாப்வேவும் வெற்றி பெற்றுள்ளது.
டிராவிட்டின் சாதனையை முறியடித்த ஆகா
இந்நிலையில், பாகிஸ்தான் அணித்தலைவர் சல்மான் ஆகா புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

முன்னதாக, 1999 ஆம் ஆண்டில் இந்திய வீரர் ராகுல் டிராவிட், ஒரே ஆண்டில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் என மொத்தம் 53 போட்டிகளில் விளையாடி, ஒரு ஆண்டில் அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
2000 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் வீரர் முகமது யூசுப் மற்றும் இந்திய வீரர் தோனி 53 போட்டிகளில் விளையாடி டிராவிட்டின் சாதனையை சமன் செய்தாலும், 26 ஆண்டுகளாக யாராலும் முறியடிக்கபடாமல் இருந்தது.

சல்மான் ஆஹா, 2025 ஆம் ஆண்டில் 5 டெஸ்ட், 17 ஒருநாள் போட்டிகள், 32 T20 போட்டிகள் என மொத்தமாக 54 சர்வதேச போட்டிகள் விளையாடி இந்த சாதனையை முறியடித்துள்ளார்.
மேலும், இந்த தொடரில் இன்னும் 2 போட்டிகளில் பாகிஸ்தான் விளையாட உள்ள நிலையில், இந்த எண்னிக்கை 56 ஆக உயரும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |