மேடையில் ஓரினச்சேர்க்கை முத்தம்; மலேசிய இசை விழா ரத்து
மலேசியாவில் மேடையில் ஓரினச்சேர்க்கை முத்தம் கொடுக்கப்பட்டதால் இசை விழா ரத்து செய்யப்பட்டது.
ஒரே பாலின பிரித்தானிய இசைக்குழு உறுப்பினர்கள் இருவர் மேடையில் முத்தமிட்டதையடுத்து, சனிக்கிழமையன்று தி குட் வைப்ஸ் இசை விழாவை மலேசியா ரத்து செய்தது.
இந்த விழா கோலாலம்பூரில் மூன்று நாள் நிகழ்ச்சியாக சிறந்த சர்வதேச இசைக்குழுக்களைக் கொண்டுள்ளது.
Redferns
பிரிட்டிஷ் பாப் ராக் இசைக்குழுவான 'தி 1975' முன்னணி பாடகர் மேட்டி ஹீலி (Matty Healy), நாட்டின் LGBT-க்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படையாக விமர்சித்து, மேடையில் தனது இசைக்குழுவைச் சேர்ந்த மற்றொரு ஆண் இசைக்கலைஞர் Ross MacDonald-ஐ முத்தமிட்டதால் இசை விழா ரத்து செய்யப்பட்டது.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மலேசியா, ஓரினச்சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமாக கருதுகிறது.
TikTok
இந்நிலையில், 'தி 1975' இசைக்குழுவின் பாடல்கள் இப்போது மலேசியாவில் இசைக்கப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டினரின் நிகழ்ச்சிகளைக் கண்காணிக்கும் அரசாங்கக் குழு தெரிவித்துள்ளது.
மலேசியாவில் ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமானது, அதன்படி குற்றவாளிகளாக கருதப்படும் சட்டங்களால் சிறைத்தண்டனை விதிக்கப்படும். நாட்டில் உள்ள LGBTQ மக்களும் அதிகாரிகளால் வழக்கமான பாகுபாடுகளை எதிர்கொள்கின்றனர்.
Roger Deckker
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Healy's onstage protest, same-sex kiss onstage, Malaysia: Music festival canceled, LGBT, Malaysia’s Anti-LGBTQ Laws, Malaysia’s Anti-Gay Laws