தன்பாலின திருமண அங்கீகாரம்: தீர்ப்பு வழங்கிய இந்திய உச்சநீதிமன்றம்!
தன்பாலின ஈர்ப்பு திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக சற்று முன்னர் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்
பல்லாயிரக்கணக்கான LGBT+ தம்பதிகள் தங்கள் ஜோடிகளை திருமணம் செய்யும் அங்கீகரிக்கக் கோரிய மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதை கடந்த ஏப்ரல் 18-ம் திகதி விசாரிக்க தொடங்கிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் கொண்ட பேர் கொண்ட அமர்வு, தொடர்ந்து 10 நாள்கள் விசாரணையை நடத்தியது.
இந்த விசாரணையில் அறிக்கை தாக்கல் செய்த மத்திய அரசு, ``தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்குவது சரியான நடவடிக்கையாக இருக்காது. இதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று கோருவது நகர்ப்புற மேல்தட்டுப் பார்வை. ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், அஸ்ஸாம் என ஏழு மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
மேலும், தன்பாலின ஈர்ப்பாளர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படும்" என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்ட வழக்கு, அக்டோபர் 17-ம் திகதியன்னு தீர்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியது.
ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் இது விசாரிக்கப்பட்டு, வழக்கில் நான்கு மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
தலைமை நீதிபதி கூறுகையில், “தன்பாலின விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிடக் கூடாது என மத்திய அரசு தனது நிலைப்பாடாக கூறியது. 200 ஆண்டுகளுக்கு முன்பு முன்னோர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத பல விஷயங்கள் இப்போது ஏற்றுக்கொள்ள கூடியதாக மாறி இருக்கிறது. அதேபோல முன்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயங்கள் இன்று மறுக்கப்படுகிறது. உடன் கட்டை ஏறுதல் மற்றும் குழந்தை திருமணங்கள் அதற்கு உதாரணமாக சொல்ல முடியும்” என்று குறிப்பிட்டார்.
நீதிமன்றத்தால் ஒரு சட்டத்தை உருவாக்க முடியாது. ஆனால், சட்டத்திலுள்ள ஷரத்துகளை கையாள முடியும். பொதுமக்களின் அடிப்படை உரிமைகளைக் காக்கும் பொறுப்பு அரசியல் சட்டப்படி நீதிமன்றங்களுக்கு உள்ளது என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி, தன்பாலின திருமணம் என்பது முன்னேறிய வகுப்பினரிடையே மட்டும் காணப்படுவது அல்ல என்று தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் திருமணம் என்பது நிலையானது மற்றும் மாற்ற முடியாதது என்ற கருத்து தவறானது. சிறப்பு திருமணச் சட்டம் ரத்து செய்யப்பட்டால், அது நாட்டை சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்திற்கு கொண்டுச் செல்லும். சிறப்பு திருமணச் சட்டத்தில் மாற்றம் தேவையா என்பதை நாடாளுமன்றமே முடிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |