ரூ.9,499க்கு அறிமுகமான Samsung Galaxy F06 5G மொபைல்
Samsung தனது மிகக் குறைந்த விலையிலான 5G ஸ்மார்ட்போன் Galaxy F06 5G மொடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
12 5G bands ஆதரவுடன், இந்தியாவின் அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளுடனும் செயல்பட கூடியதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
Samsung Galaxy F06 5G வடிவமைப்பு & திரை
Ripple Glow Finish கொண்ட இந்த போன், ஒளி தாக்கும்போது பளபளப்பாக காட்சியளிக்கிறது.
6.7-inch HD+ திரை, 800 Nits அதிகபட்ச பிரகாசத்துடன் தெளிவான பார்வையை வழங்குகிறது.
8mm தடிமனாகவும், 191 கிராம் எடையுடனும் வரும் இந்த மொபைல் Bahama Blue, Lit Violet என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
சிறப்பம்சங்கள்
MediaTek D6300 processor மூலம் வலுவான செயல்திறனை வழங்குகிறது.
பின்புறம் 50MP wide-angle camera, 2MP depth sensor camera மற்றும் முன்புறம் 8MP camera ஆகியவை தரமான புகைப்பட அனுபவத்தை உறுதி செய்கின்றன.
இந்த மொபைலில் 5000mAh பேட்டரி மற்றும் 25W Fast Charging வசதி உள்ளது.
4 ஆண்டுகள் OS அப்டேட்கள், 4 ஆண்டுகள் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும்.
விலை
Galaxy F06 5G மொபைல் 4GB/128GB வேரியண்ட் ரூ.9,499-க்கும், 6GB/128GB வேரியண்ட் ரூ.10,999-க்கும் விற்பனைக்கு வருகிறது.
ஆரம்ப கட்ட விற்பனைக்கு ரூ.500 cashback வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Samsung Galaxy F06 5G price, Samsung Galaxy F06 5G mobile, Samsung smartphone under 10000