Samsung-Apple புதிய ஒப்பந்தம்: iPhone 18-க்கு புதிய image sensor தயாரிப்பு
Samsung நிறுவனம் Apple நிறுவனத்திற்காக image sensor-ஐ தயாரிக்க புதிய ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த image sensor ஆப்பிளின் iPhone 18 தொடருக்காக பிரத்யேகமாக உருவாக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள சம்சுங்கின் ஆஸ்டின் தொழிற்சாலையில் இதனை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் 3 அடுக்குகள் கொண்ட சென்சார் தொழில்நுட்பத்தை (Three-Layer Stacked Image Sensor) சம்சுங் ஐபோனுக்காக வழங்கவுள்ளது.
இது ஆப்பிள் தயாரிப்புகளின் சக்தி மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் அமெரிக்காவிலேயே முதல்முறையாக அறிமுகமாகிறது.
மேலும், இந்த ஒப்பந்தத்தின் மூலம், Sony நிறுவனம் ஐபோனுக்கான சென்சார்களை வழங்கும் ஒரே நிறுவனம் என்ற நிலை மாறுகிறது.
Apple நிறுவனம் அமெரிக்காவில் 100 பில்லியன் டொலர் முதலீடு செய்யும் தோட்டத்தை அறிவித்துள்ள நிலையில், 100 சதவீத வரியை தவிர்க்கும் வகையில், அமெரிக்காவில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு சலுகைகள் அளிக்கப்படும் என ட்ரம்ப் கூறியுள்ளார்.
சோனிக்கு அமெரிக்காவில் தொழிற்சாலை இல்லாதது சம்சுங் நிறுவனத்திற்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Samsung Apple Deal, iPhone 18 Camera Sensor, Sony image sensor, Samsung image sensor