ஓவருக்கு 11 பந்துகள் வீசி படுமோசமான சாதனை! 4 வைடு, 1 நோ பால் கொடுத்த வீரர்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சாளர் சந்தீப் ஷர்மா ஓவருக்கு 11 பந்துகள் வீசி மோசமான சாதனைப் பட்டியலில் இணைந்தார்.
சந்தீப் ஷர்மா
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.
இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சாளர் சந்தீப் ஷர்மா (Sandeep Sharma) 20வது ஓவரில் 11 பந்துகள் வீசினார்.
அதாவது 4 வைடு மற்றும் ஒரு நோ பாலை அவர் வீச மிக நீண்ட ஓவராக அது மாறியது. அந்த ஓவரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு 19 ஓட்டங்கள் கிடைத்தது.
படுமோசமான சாதனை
இது சந்தீப் ஷர்மாவின் மோசமான பந்துவீச்சாக மாறியதுடன், ஐபிஎல் வரலாற்றில் 11 பந்துகளை ஒரே ஓவரில் வீசிய பந்துவீச்சாளர்கள் பட்டியலிலும் இணைந்தார்.
இதற்கு முன்பு முகமது சிராஜ் (2023), துஷார் தேஷ்பாண்டே (2023), ஷர்துல் தாக்கூர் (2025) ஆகியோர் இந்த மோசமான சாதனையை செய்திருந்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |