மேட்ச் ஃபிக்சிங் மூலம் ரூ.50,000 கோடி பெற்ற பாகிஸ்தான்? - இந்திய எம்.பி பரபரப்பு குற்றச்சாட்டு
மேட்ச் பிக்சிங் மூலம்பாகிஸ்தான் ரூ.50,000 கோடி பெற்றதாக இந்திய எம்.பி ஒருவர் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்தியா பாகிஸ்தான் போட்டி
2025 ஆசிய கோப்பையின் நேற்றைய போட்டியில், பாகிஸ்தானை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2008 மும்பை தாக்குதலுக்கு பின்னர், இரு அணிகளும் இருதரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடுவதில்லை.
பாகிஸ்தானில் நடைபெறும் சர்வதேச போட்டிகளுக்கும் செல்வதையும் இந்தியா தவிர்த்து வந்தது. இதன் காரணமாக இந்தியா விளையாடும் போட்டிகள் வேறு நாடுகளில் நடத்தப்பட்டது.

போட்டி தொடங்கும் முன்னே பாகிஸ்தானுக்கு நேர்ந்த அவமானம் - தேசிய கீதத்திற்கு பதிலாக ஒலித்த ஜிலேபி பேபி
இந்நிலையில், பகல்ஹாம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் காரணமாக பாகிஸ்தான் உடனான போட்டியில் இந்தியா விளையாட ஆம் ஆத்மி, சிவசேனா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
ஆனால், போட்டி துபாயில் நடப்பதாலும், இதுசர்வதேச தொடர் என்பதாலும் பாகிஸ்தான் உடன் விளையாடுவதாக பிசிசிஐ(BCCI) விளக்கமளித்து.
இந்த போட்டியில், பாகிஸ்தான் வீரர்களுடன், இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம்(ICC) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்(PCB) புகார் அளித்துள்ளது.
மேட்ச் ஃபிக்சிங் குற்றச்சாட்டு
இந்நிலையில், இந்த போட்டியின் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.1,000 கோடி கிடைத்ததுள்ளதாக சிவசேனா எம்பி சஞ்சய் ராத் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "நேற்றைய போட்டியின் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.1,000 கோடி கிடைத்தது. மேலும் மேட்ச் ஃபிக்சிங்கின் மூலம் கிடைத்த ரூ.1.5 லட்சம் கோடி ரூபாயில், ரூ.50,000 கோடி பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளது.
IMF, ADE மற்றும் உலக வங்கியிடம் பாகிஸ்தானுக்கு கடன் கொடுக்க வேண்டாம் என்று சொன்னீர்கள். காரணம் அந்தப் பணம் பயங்கரவாதத்திற்குப் பயன்படுத்தப்படும் என்று அதனை வேண்டாம் என்று வாதிட்டீர்கள்.
ஆனால் நேற்று அமித்ஷாவின் மகன் பாகிஸ்தானுக்குப் பணம் கொடுத்தார். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை வலுப்படுத்த நிதி உதவி செய்யப்பட்டுள்ளது அவர்களது உத்தி. இதன் மூலம் அவர்கள் நம் மீது தாக்குதல் தொடுத்து அரசியல் ஆதாயம் அடைவார்கள்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |