CSK அணிக்கு வரும் சஞ்சு சாம்சன்? அவரே சொன்ன பதில்
CSK அணிக்கு வருவது தொடர்பான கேள்விக்கு சஞ்சு சாம்சன் பதிலளித்துள்ளார்.
சஞ்சு சாம்சன்
2025 ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அணித்தலைவராக இருந்தவர் சஞ்சு சாம்சன்.
இந்த தொடரில், 9 போட்டிகளில் விளையாடிய சஞ்சு சாம்சன், 35.62 ராசரியில், 140.39 ஸ்ட்ரைக் ரேட்டில் 285 ஓட்டங்கள் எடுத்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் ரியான் பராக்கை அணித்தலைவராக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், சஞ்சு சாம்சன் CSK அணிக்கு வர உள்ளதாக தகவல் வெளியானது.
CSK பேச்சுவார்த்தை
2025 ஐபிஎல் தொடர் CSK அணிக்கு மோசமான ஒன்றாக அமைந்தது. முதல்முறையாக அந்த அணி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்றது.
2026 ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள CSK அணி, அணியில் பல்வேறு மாற்றங்களை செய்ய தயாராகி வருகிறது.
இதன்படி, டிரேடிங் மூலம் சஞ்சு சாம்சனை வாங்க CSK அணி நிர்வாகம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
இதில், சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ருதுராஜ் மற்றும் ஷிவம் துபேவை ராஜஸ்தான் அணி கேட்பதால், பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவரே சொன்ன பதில்
இந்நிலையில், டிரேடிங் மூலம் CSK அணி செல்ல உள்ளீர்களா என சஞ்சு சாம்சனிடம் கேள்வி எழுப்பிய போது, "தற்போது இது குறித்து பேச வேண்டாம்" என தெரிவித்துள்ளார்.
நேரடியாக மறுப்பு தெரிவிக்காத நிலையில், பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்பது உறுதியாகிறது. முன்னதாக டிரேடிங் மூலம் அணி மாறிய வீரர்களிடம் கேள்வி எழுப்பிய போது, இதே பதிலையே அளித்தனர்.
அதேவேளையில், ரிஷப் பண்ட்டை வாங்கவும், CSK அணி நிர்வாகம் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |