இலங்கை ஜனாதிபதிக்கு சாந்தன் மிக உருக்கமான கடிதம்
வயதான தன் தாயாரை கவனித்துக் கொள்ள தனக்கு அனுமதி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்து திருச்சி சிறப்பு முகாமில் இருந்து சாந்தன் இலங்கை ஜனாதிபதிக்கு மிக உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் ஆகிய ஆறு பேர் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.
இவர்களில் சாந்தன் மற்றும் முருகன் ஆகிய இருவரும் திருச்சி மத்திய சிறையில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தன்னை இலங்கைக்கு வர அனுமதிக்குமாறு இலங்கை ஜனாதிபதிக்கு சாந்தன் கடிதமொன்றை எழுதியுள்ளார்.
அதில், தனது தாய் முதுமையான நிலையில் இருப்பதாகவும், அவரை கவனித்துக் கொள்வதற்காக அனுமதி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் 32 ஆண்டுகளாக அவரை பார்க்கவில்லை, முதுமை காலத்தில் அவருடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதற்கான அனுமதி கிடைக்கும் பட்சத்தில் சாந்தன் இலங்கைக்கு செல்ல வாய்ப்புள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |