பட்ஜெட் உரையின் போது நிர்மலா சீதாராமன் அணிந்திருந்த புடவையின் சுவாரஸ்ய பின்னணி
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது பட்ஜெட் உரையின் போது அணிந்திருந்த புடவையின் பின்னணியை பார்க்கலாம்.
பரிசாக வந்த புடவை
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தினத்தன்று அணியும் புடவையும் பேசப்பட்டு தான் வருகிறது. ஏனென்றால், ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் வளமான ஜவுளி பாரம்பரியத்தையும் பாரம்பரிய கைவினைத்திறனையும் பிரதிபலிக்கும் சேலையை அவர் அணிவார்.
அதேபோல இந்த ஆண்டு அவர், ட்ரேட் மார்க்கான ‘பாஹி கட்டா’ சால்வையும், இந்திய அரசு முத்திரையுடன் கூடிய வெல்வெட் பையில் பட்ஜெட் உரை அடங்கிய டேப்லேட்டும் கொண்டு சென்றார்.
தங்க நிற வேலைப்பாடுகளுடன் கூடிய அழகான வெள்ளை நிற சேலையை அணிந்து, சிவப்பு நிற ரவிக்கை மற்றும் சால்வை அணிந்திருந்தார். அந்த புடவையின் பின்னால் ஒரு சிறப்பு கதையயும் உள்ளது.
பத்மஸ்ரீ விருது பெற்ற பீகாரைச் சேர்ந்த மதுபானி கலைஞரான துலாரி தேவி என்பவர் நிர்மலா சீதாராமனுக்கு இந்த புடவையை பரிசாக கொடுத்துள்ளார். மதுபானியில் உள்ள மிதிலா ஆர்ட் இன்ஸ்டிட்யூட்டுக்கு கடன் அவுட்ரீச் நிகழ்ச்சிக்காகச் நிதியமைச்சர் சென்றிருந்தபோது துலாரி தேவியை சந்தித்தார்.
அங்கு அவர் சீதாராமனிடம் புடவையை வழங்கி, பட்ஜெட் தினத்தன்று அதை அணியுமாறு கேட்டுக் கொண்டார்.
மதுபானி கலை மற்றும் துலாரி தேவியின் சிறப்பான திறமைக்கு மரியாதை செலுத்தும் வகையில், பட்ஜெட்டை தாக்கலில் அந்த புடவையை அணிந்து அவர் கோரிக்கையை நிறைவேற்றினார்.
யார் இந்த துலாரி தேவி
புகழ்பெற்ற மதுபானி கலைஞரான துலாரி தேவி ஓவியம் வரைவதில் ஈடுபடாத மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர். இருப்பினும், ஒரு சிறந்த மதுபானி ஓவியரான கர்பூரி தேவியிடம் பணிபுரியும் போது அவர் கலை வடிவத்தின் மீது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.
தனது 16 வயதில் கணவனால் கைவிடப்பட்டது, குழந்தையை இழந்தது, 16 ஆண்டுகளாக வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணிபுரிவது போன்ற பல இன்னல்களை எதிர்கொண்ட போதிலும் துலாரி தேவி மனம் தளரவில்லை.
குழந்தைத் திருமணம், எய்ட்ஸ், பெண் சிசுக்கொலை போன்ற முக்கியமான சமூகப் பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வையும் அவரது ஓவியங்கள் பரப்பின.
பல ஆண்டுகளாக, அவர் 10,000 ஓவியங்களை உருவாக்கி, இந்தியா முழுவதும் 50 க்கும் மேற்பட்ட கண்காட்சிகளில் காட்சிப்படுத்தியுள்ளார்.
மிதிலா ஆர்ட் இன்ஸ்டிட்யூட் மற்றும் சேவா மிதிலா சன்ஸ்தான் போன்ற அமைப்புகளின் மூலம் 1,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளித்து, பாரம்பரிய கலை வடிவம் எதிர்கால சந்ததியினருக்கு செழிக்க வேண்டும் என்பதை உறுதி செய்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |