சசிகலா, இளவரசிக்கு பிடிவாரண்ட்! நீதிமன்றம் உத்தரவு
கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சொகுசு வசதிக்காக சசிகலா, இளவரசி லஞ்சம் கொடுத்த வழக்கில் ஆஜராகாததால் லோக் ஆயுக்தா நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிறையில் சொகுசு வசதி
கடந்த 2017 ஆம் ஆண்டு, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. அதனால் அப்போது அவர்கள், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.
அந்த சமயத்தில், சிறையில் சொகுசு வசதிக்காக லஞ்சமாக ரூ.2 கோடி கொடுத்ததாக புகார் எழுந்தது. இதற்கான தகவலை சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா பரபரப்பாக வெளியிட்டார். மேலும், இது தொடர்பான வீடியோவும் பரவியது.
பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்
இது தொடர்பான வழக்கானது லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், சசிகலா மற்றும் இளவரசி ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. இதனால், இவர்கள் இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து லோக் ஆயுக்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அக்டோபர் 5 ஆம் திகதி சசிகலா மற்றும் இளவரசியை கைது செய்து நீதிமன்றத்தின் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |