சசிகலாவிடம் தொலைப் பேசியில் பேசியவர் இவர் தான்! யார் இவர் தெரியுமா? 2-வது ஆடியோவும் வெளியானது
சசிகலாவிடம் தொண்டர் ஒருவர் பேசிய ஆடியோ வைரலான நிலையில், அது உண்மை தான என அவரிடம் பேசிய ஆதரவாளர் கூறியுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கு காரணமாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, சமீபத்தில் விடுதலையாகி தமிழகம் திரும்பினார். தமிழகம் திரும்பிய இவர், திடீரென்று தான் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார்.
அதன் பின் இவர் இல்லாமல் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட அதிமுக தோல்வியடைந்தது. இந்நிலையில், சசிகலா, தன்னுடைய ஆதரவாளர் ஒருவரிடம் பேசிய ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.
இதனால் இது குறித்து அந்த ஆடியோவில் பேசியதாக கூறப்படும் வினோத் சுரேஷ் என்பவர் அது உண்மை தான் என்று பிரபல தமிழ் நாளிதழான விகடனில் கூறியுள்ளார்.
பேராவூரணியைச் சேர்ந்த இவர், பேராவூரணி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத்தலைவராக இருக்கிறார்.
அவர் சசிகலா அதாவது சின்னம்மா மீண்டும் வருவார் என்று கூறியிருப்பது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சின்னம்மாவுக்கு அவ்வப்போது கட்சி குறித்து கடிதம் எழுதுவேன், அவர் சார்பாக எனக்கு மறு கடிதம் வரும். ஆனால் அவர் கட்சியில் இருந்து ஒதுங்குவதாக கூறியது எனக்கு மிகந்த வேதனையை கொடுத்ததாக கூறினார்.
இந்நிலையில், தற்போது இரண்டாவது ஆடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில், சசிகலா கட்சியில் இப்படி சண்டை போட்டுக் கொண்டு கிடப்பதை என்னால் பார்க்க முடியவில்லை,
"கட்சியை காப்பாத்த திரும்ப வருவேன்" வைரலாகும் சசிகலா ஆடியோ#Sasikala #admk pic.twitter.com/XFHh2ypnBY
— Mercury (@Mercury24428354) May 30, 2021
இதனால் நிச்சயமாக கொரோனா முடிந்தவுடன் நான் வருகிறேன், அவ்ளோ கஷ்டப்பட்டு வளர்த்த கட்சிய இப்படியா செய்வாங்க என்று வேதனையுடன் பேசுகிறார்.