உலகின் மிகவும் சக்திவாய்ந்த சாத்தான் ஏவுகணையை தயார் நிலையில் வைத்திருக்கும் விளாடிமிர் புடின்
சாத்தான் 2 என அழைக்கப்படும் உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணையை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவை மூழ்கடிக்க போதுமானது
தடுக்க முடியாத கண்டம் விட்டு கண்டம் பாயும் அந்த ஏவுகணையானது ஒரே ஒரு தாக்குதலில் பிரித்தானியாவை மூழ்கடிக்க போதுமானது என்றும் 14 மாடி கட்டிடத்திற்கு ஒப்பானது அந்த ஏவுகணை எனவும் கூறுகின்றனர்.
Credit: East2West
208 டன் எடை கொண்ட அந்த ஏவுகணையானது 114 அடி நீளம் கொண்டது. 11,000 மைல்கள் தொலைவு செல்லக் கூடிய அந்த ஏவுகணை மணிக்கு 15,880 மைல்கள் வேகத்தில் பாயக்கூடியது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதலை முன்னெடுக்கும் நோக்கில் சாத்தான் 2 ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் இருந்து 1,600 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள பிரித்தானியாவை வெறும் 6 நிமிடங்களில் அந்த ஏவுகணையால் சென்றடைய முடியும்.
உத்தியோகப்பூர்வ தகவல்
மேற்கத்திய நாடுகளில் அந்த ஏவுகணைக்கு ஒப்பான ஆயுதம் என எதுவும் இல்லை என்றே கூறுகின்றனர். 2022ல் இருந்தே செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மர்மமான முறையில் தாமதம் செய்யப்பட்டது.
Credit: East2West
வெறும் 6 நிமிடத்தில் பிரித்தானியாவை கடலில் மூழ்கடிக்க முடியும் என ரஷ்ய ஆதரவாளர்கள் சாத்தான் 2 ஏவுகணை குறித்து பெருமை பேசினாலும், ஒரே ஒரு சோதனை முயற்சி மட்டுமே முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சாத்தான் 2 ஏவுகணையானது ஜூன் மாதத்தில் இருந்து களமிறக்கப்படும் என விளாடிமிர் புடின் அறிவித்திருந்தாலும், தற்போது தான் உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |