ஆர்க்டிக் தீவில் பிரம்மாண்ட வால்ரஸ் கூட்டம்: வெளியான செயற்கைக்கோள் புகைப்படம்!
ஆர்க்டிக் தீவில் காணப்படும் வால்ரஸ் கூட்டம் தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
ஆர்க்டிக் தீவில் ஸ்வால்பார்ட் என்ற தொலைதூர கடற்கரையில் மிகப்பெரிய வால்ரஸ் கூட்டத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த வால்ரஸ் கூட்டம் நார்வே-விற்கும், வட துருவத்திற்கும் இடையில் உள்ள ஒதுக்குப்புறமான தீவு கடற்கரையில் காணப்பட்டுள்ளது.

செயற்கைக்கோள் புகைப்படங்கள்
ராட்சத கடல் பாலூட்டிகளான வால்ரஸ் அதிக எண்ணிக்கையில் குவியும் இந்த இடம் தொடர்பான கண்டுபிடிப்பு ஆர்க்டிக் உயிரினங்களை கண்டறியும் முயற்சியில் புதிய முன்னேற்றத்தை குறிக்கிறது.
வால்ரஸ் கூட்டம் செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் கண்டுபிடிக்கப்படும் வரை இந்த இடம் இதுவரை பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விண்வெளியில் இருந்து வால்ரஸ்(Walrus from Space) என்ற திட்டத்தின் கீழ் இயற்கையான உலகளாவிய நிதியம்(WWF) மற்றும் பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே(BAS) இணைந்து முன்னெடுத்த திட்டத்தின் விளைவு இந்த முக்கிய கண்டுபிடிப்பாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |