ரஷ்ய ராணுவத்தின் அத்துமீறல்: வெளியான புதிய செயற்கைகோள் புகைப்படங்கள்!
உக்ரைனின் புச்சா நகரில் நடத்தப்பட்டுள்ள படுகொலைக்கு பிறகு உருவான வெகுஜன புதைகுழிகள் குறித்த செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனில் ரஷ்ய படைகள் 5 வாரங்களாக தாக்குதல் நடத்திவந்த நிலையில், தற்போது உக்ரைனின் கிழக்கு பகுதி நகரமான டான்பாஸ் நோக்கி ரஷ்யா தனது படைகளை பின்னகர்த்தி உள்ளது.
இந்த படைகள் பின்நகர்விற்கு பிறகு, உக்ரைனின் முக்கிய நகரான புச்சாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டு அவர்களது உடல்கள் சாலையில் அங்கும் இங்குமாக கிடக்கும் காட்சிகள் வெளிவந்து உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து புச்சாவின் துணை மேயர் தாராஸ் ஷப்ரவ்ஸ்கி வெளியிட்ட அறிக்கையில், இதுவரை 300 இறந்தவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு இருப்பதாகவும் அதில் 50க்கும் மேற்பட்ட உடல்கள் ரஷ்ய துருப்புகளால் போர் விதிமுறைகளுக்கு மீறி நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ரஷ்ய ராணுவம் நடத்திய இந்த கொலைவெறி தாக்குதலுக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கையும் உக்ரைன் உலக நாடுகள் மத்தியில் முன்வைத்து வருகிறது.
இந்தநிலையில் புச்சா நகரில் நடத்தப்பட்டுள்ள படுகொலைக்கு பிறகு உருவான வெகுஜன புதைகுழிகள் குறித்த செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியாகி உலகநாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த செயற்கைகோள் படங்கள் புச்சா நகரில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூ மற்றும் பைர்வோஸ்வான்னோஹோ ஆல் செயிண்ட்ஸ் தேவாலயத்திற்கு அருகிலுள்ள தென்மேற்குப் பகுதியில் தோராயமாக 45 அடி நீளமான அகழியுடன் கல்லறைத் தளத்தை படங்கள் காட்டுகின்றன.
ஜெலன்ஸ்கியை குற்றம்சாட்டும் ஹங்கேரி பிரதமர்: நான்காவது முறையாக ஆட்சியமைப்பு!