சூடானிலிருந்து இந்தியர்கள் உட்பட 150 பேரை கப்பல் மூலம் மீட்ட சவுதி அரேபியா
சூடானில் கடுமையான போர் நடைபெறும் வேலையில் அங்கிருந்து இந்தியர்கள் உட்பட , 150 வெளிநாட்டினரை சவுதி அரேபிய அரசு கப்பல் மூலம் மீட்டுள்ளது.
சூடானில் வலுக்கும் போர்
சூடான் நாட்டில் ராணுவ மற்றும் துணை ராணுவத்தினரிடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இப்போரில் 400 பேர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் ராணுவ வீரர்கள் உட்பட பொதுமக்களும் அடங்குவர். மேலும் சில வெளிநாட்டவரும் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளனர்.
@afp
இந்தநிலையில் அந்நாட்டில் வாழும் இந்தியர்கள் உட்பட பல்வேறு நாட்டினர் அங்கிருந்து வெளியேற முடியாமல் தடுமாறி வருகிறார்கள். இதனிடையே சூடானிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை மீட்க, அமெரிக்க ராணுவத்தை அனுப்ப ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
@reuters
அதன்படி சூடானுக்கு சென்ற அமெரிக்க ராணுவத்தினர் அங்கிருந்து அமெரிக்க தூதரக அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினரை பத்திரமாக மீட்டு அழைத்து சென்றுள்ளனர்.
150 பேர் மீட்ட சவுதி அரேபியா
சூடானில் உள்ள அமெரிக்கர்களை ஒருங்கிணைந்து வெளியேற்றும் திட்டம் தற்போது ஏதும் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்தியர்கள் உள்பட 150 பேரை சவூதி அரேபியா மீட்டு சூடானில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றியது.
@afp
சூடானில் முக்கிய துறைமுகமாக போர்ட் சூடானில் இருந்து கப்பல் மூலம் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள், 91 வெளிநாட்டினர் என சுமார் 150 பேரை ஜெட்டாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இதில் சவூதி தூதரக அதிகாரிகள் விமான ஊழியர்கள், இந்தியா, பாகிஸ்தான், எகிப்து, கனடா, வங்காளதேசம் பிலிப்பைன்ஸ், குவைத், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், புர்கினா பாசோ ஆகிய நாட்டை சேர்ந்தவர்கள் அடங்குவர்.
#Statement | In the implementation of the directives of the Kingdom's Leadership, we are pleased to announce the safe arrival of the evacuated citizens of the Kingdom from Sudan and several nationals of brotherly & friendly countries, including diplomats & international officials pic.twitter.com/Eg0YemshYD
— Foreign Ministry ?? (@KSAmofaEN) April 22, 2023
அவர்கள் சவூதி அரேபியா ராணுவ அதிகாரிகளை பூங்கொத்து சாக்லேட் கொடுத்து வரவேற்றனர். சூடானில் இருந்து இந்தியர்களை வெளியேற்றுவது குறித்து இந்திய வெளியுறவு மந்திரி ஜெங்சங்கர் சவூதி அரேபிய அமைச்சருடன் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.