குழந்தைகள் மீதான தடையை நீக்கியது சவுதி! வெளியான முக்கிய அறிவிப்பு
பொழுதுபோக்கு நிகழ்வுகள், செயல்பாடுகளில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கலந்துக்கொள்ள விதிக்கப்பட்டிருந்த தடையை சவுதி அரேபியா நீக்கியுள்ளது.
இது குறித்து சவுதி பொது பொழுதுபோக்கு ஆணையம் (GEA)வெளியிட்ட அறிவிப்பில், சவுதி அரேபியாவில் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கொரோனா தடுப்பூசிகளை எடுக்க வேண்டிய அவசியமில்லை.
மேலும் வெளிப்புறங்களில் திறந்தவெளியில் நடைபெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளில் கலந்து கொள்ளலாம்.
வெளிப்புற பொழுதுபோக்கு நிகழ்வுகளில் அனுமதிக்க, குழந்தைகளுடன் தடுப்பூசி போட்ட பெரியவர்கள் வர வேண்டும். குழந்தைகளுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கக்கூடாது.
Tawakkalna செயலியில் அவர்களின் உடல்நிலை ‘தொற்று இல்லை’ மற்றும் ‘பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொள்ளவில்லை’ என காட்ட வேண்டும் என்று GEA தெரிவித்துள்ளது.
சமூக இடைவெளி கட்டுப்பாடுகள் எப்போதும் கடைபிடிக்க வேண்டும் என GEA மேலும் கூறியது.
குழந்தைகளுக்கு கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டிருக்காது என்பதால், இதுபோன்ற நிகழ்வுகளில் பங்கேற்பவர்களின் மொத்த எண்ணிக்கை 40 சதவிகிதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
அதேசமயம், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் உட்புற இடங்களில் நடைபெறும் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளில் நுழைய தடை என GEA அறிவித்துள்ளது.