இந்தியா உட்பட 14 நாடுகளுக்கான விசா விதிகளை மாற்றியது சவூதி அரேபியா
சவூதி அரேபியா, இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கான விசா விதிகளை மாற்றியுள்ளது.
இந்த நாடுகளுக்கு ஒரே முறை பயணிக்கக்கூடிய Single-Entry Visa மட்டுமே வழங்க முடிவு செய்துள்ளது.
இந்த மாற்றம் 2024 பிப்ரவரி முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இந்தியா உட்பட பாகிஸ்தான், எகிப்து, இந்தோனேசியா, எத்தியோப்பியா, அல்ஜீரியா, நைஜீரியா, ஈராக், ஜோர்டான், மொரோக்கோ, சுடான், துனீசியா, ஏமன் ஆகிய நாடுகளும் இந்த புதிய கட்டுப்பாட்டில் அடங்குகின்றன.
புதிய விதிகள்
- பயணிகளுக்கு 30 நாட்கள் மட்டுமே செல்ல அனுமதி.
- நீட்டிப்பு அல்லது பல முறை பயணிக்க அனுமதி இல்லை.
- இது சுற்றுலா, தொழில் மற்றும் குடும்ப சந்திப்பு விசாக்களுக்கு பொருந்தும்.
-ஹஜ், உம்ரா, தூதரகம் மற்றும் குடியுரிமை விசாக்களுக்கு மாற்றம் இல்லை.
சவூதி அதிகாரிகள், அனுமதியின்றி ஹஜ் பயணம் செய்வதை கட்டுப்படுத்த இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.
2024ல், அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படாத ஹஜ் பயணிகள் காரணமாக, கூட்ட நெரிசல் மற்றும் வெப்பத்தால் 1,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த கட்டுப்பாடு தற்காலிகமானது என்றாலும், மீண்டும் எப்போது மாற்றப்படும் என்பது தெரியவில்லை. பயணிகள் முன்கூட்டியே விசா விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Saudi Arabia new visa policy, Saudi Arabia single-entry visa