சவூதி அரேபியாவில் அனைத்து விசா வகையினருக்கும் உம்ரா அனுமதி
சவூதி அரேபியாவில் அனைத்து விசா வகையினருக்கும் உம்ரா அனுமதிக்கப்படுகிறது.
சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பின்படி, தற்போது அனைத்து வகை விசா வைத்துள்ள வெளிநாட்டு குடியிருப்பாளர்களும் உம்ரா பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.
இது சவூதி அரேபியாவின் Vision 2030 திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இந்த புதிய நடவடிக்கை, உம்ரா பயணத்தை எளிதாக்குவதோடு, உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்களுக்கு ஆன்மிக அனுபவத்தை வழங்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளது.
இந்த புதிய விதிகளின்படி, தனிப்பட்ட குடும்ப விசா, சுற்றுலா விசா, ட்ரான்சிட் விசா மற்றும் வேலை விசா போன்ற அனைத்து வகை விசா வைத்துள்ளவர்களும் உம்ரா பயணம் செய்யலாம்.
இது பயணிகளுக்கான நடைமுறையை எளிதாக்குவதோடு, ஆன்மிக சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.
Nusuk உம்ரா தளத்தின் மூலம் டிஜிட்டல் வசதிகள்
ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் Nusuk என்ற புதிய டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தளத்தின் மூலம் பயணிகள் உம்ரா அனுமதி பெற, பயன் திட்டங்களை தெரிவு செய்ய மற்றும் தேவையான சேவைகளை முன்பதிவு செய்யலாம்.
பயணிகள் தங்களுக்கேற்ப திகதிகள் மற்றும் சேவைகளை தெரிவு செய்யும் சுதந்திரம் பெறுகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Umrah visa eligibility, Saudi Arabia Umrah news, All visa holders Umrah Saudi, Nusuk Umrah, Umrah for tourist visa holders, Umrah travel rules Saudi Arabia