வேலை விசா விதிகளை கடுமையாக்கும் சவுதி அரேபியா... பாதிக்கப்படும் ஆசிய நாடொன்று
சவுதி அரேபியாவில் வேலைக்கான விசாவிற்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களுக்கு புதிய முக்கியமான விதியை கட்டாயப்படுத்த உள்ளனர்.
ஜனவரி 14 முதல்
அதாவது, இந்தியர்கள் இனி அவர்களின் தொழில்முறை மற்றும் கல்வித் தகுதிகளை முன்கூட்டியே சரிபார்க்கப்பட்டு உறுதி செய்ய வேண்டும்.
வெளியான தகவல்களின் அடிப்படையில், வேலை விசாக்களை வழங்குவதற்கான தொழில்முறை சரிபார்ப்பு நடைமுறைகள் ஜனவரி 14 முதல் செயல்படுத்தப்படும் என்றே தெரிய வந்துள்ளது.
வேலை விசாக்களை வழங்குவதற்கான கட்டாயத் தேவைகளில் ஒன்றாக தொழில்முறை சரிபார்ப்பு மாறும் என்றே சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியர்களின் வருகையை கட்டுப்படுத்தும் விதமாக முன் சரிபார்ப்புத் தேவையை கட்டாயமாக்குவது என்பது ஆறு மாதங்களுக்கு முன்பே முன்மொழியப்பட்டது.
இந்த நடவடிக்கையானது சவுதி அரேபியாவின் தொழிலாளர் சந்தையில் சீரான அணுகலை எளிதாக்குவதையும், தொழிலாளர் தக்கவைப்பு விகிதங்களை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மட்டுமின்றி, ஆட்சேர்ப்பு செயல்முறையை நெறிப்படுத்தவும், சவுதி அரேபியாவில் பணியாளர்களின் தரத்தை மேம்படுத்தவும் இது வாய்ப்பாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இகாமாக்களைப் புதுப்பித்தல்
புதிய விதிகளின் கீழ், நிறுவன உரிமையாளர்கள் மற்றும் மனிதவளத் துறைகள் வெளிநாட்டு ஊழியர்கள் வழங்கும் சான்றிதழ்கள் மற்றும் தகவல்களைச் சரிபார்க்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.
கூடுதலாக, வெளிநாட்டினருக்கான வெளியேறும் மற்றும் மறு நுழைவு விசா நீட்டிப்புகள் மற்றும் இகாமாக்களைப் புதுப்பித்தல் தொடர்பான விதிகளையும் சவுதி அரேபியா புதுப்பித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சகத்தின் தரவுகளின்படி, சவுதி அரேபியாவில் 2.69 மில்லியன் வெளிநாட்டு தொழிலாளர்களுடன் முன்னணியில் உள்ள வங்கதேசத்திற்கு அடுத்தபடியாக இந்தியர்கள் இரண்டாவது பெரிய வெளிநாட்டினர் சமூகமாக உள்ளனர்.
2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, 2.4 மில்லியனுக்கும் அதிகமான இந்தியத் தொழிலாளர்கள் சவுதி அரேபியாவில் வசிப்பதாகக் கூறப்படுகிறது. இதில் தனியார் துறையில் 1.64 மில்லியன் பேர்களும், உள்ளூர் வேலைவாய்ப்புகளில் 785,000 பேரும் அடங்குவர்.
சவுதி அரேபியாவின் தொழிலாளர் சந்தையில் இந்திய தொழிலாளர்கள் ஒரு முக்கிய பகுதியாக உள்ளனர். இருப்பினும், விண்ணப்பதாரர்களை சரிபார்க்க போதுமான தேர்வு மையங்கள் இல்லை என்ற புகார் பரவலாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |