வணிகப் பொருட்களில் அல்லாஹ்வின் பெயர் பயன்படுத்த தடை விதித்துள்ள நாடு
சவுதி அரேபியா, வணிக நிறுவனங்கள் அல்லாஹ்வின் புனித பெயர்களை (Al Asma Ul Husna) பைகள், பொருள் பேக்கேஜிங் மற்றும் விளம்பரப் பொருட்களில் அச்சிடுவதற்கு தடை விதித்துள்ளது.
இந்த முடிவை சவுதி வணிக அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர் அப்துல்ரஹ்மான் அல் ஹுசைன் அறிவித்தார்.
“அல்லாஹ்வின் பெயர்கள் ஆழ்ந்த ஆன்மீக மற்றும் மத முக்கியத்துவம் கொண்டவை. அவை தவறாக கையாளப்படக்கூடிய, தூக்கி எறியப்படக்கூடிய பொருட்களில் இடம்பெறக் கூடாது” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தடை, குறுகிய கால பயன்பாட்டுக்கான பொருட்கள் - குறிப்பாக பைகள், பேக்கேஜிங், விளம்பரப் பொருட்கள் அனைத்துக்கும் பொருந்தும். இதன் நோக்கம், புனித பெயர்களின் மரியாதையை பாதுகாப்பது.

மேலும், சவுதி அரசு Law of Trade Names என்ற புதிய சட்டத்தை ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, வணிக நிறுவனங்கள் தங்கள் பெயர்களில் அரசு, அரசு சார்ந்த அமைப்புகள் அல்லது தடை செய்யப்பட்ட சொற்கள் பயன்படுத்தக் கூடாது.
“Saudi Arabia” அல்லது நகரங்களின் பெயர்களைப் பயன்படுத்தும் போது கூட, குறிப்பிட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என சட்டம் கூறுகிறது.
இந்த நடவடிக்கை வணிக சுதந்திரம் மற்றும் மத, கலாச்சார, சமூக மதிப்புகள் ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தும் முயற்சி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Saudi Arabia bans Allah names packaging, Saudi divine names commercial ban 2026, Allah names product packaging restriction, Saudi trade law religious names ban, Saudi Arabia commercial packaging rules, Saudi Arabia religious respect regulations, Saudi ban on divine names in business, Saudi Arabia Allah names branding law, Saudi Arabia packaging religious names ban, Saudi Arabia trade names law update