சவுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்: பயணிகளை அழைத்துச் செல்ல இஸ்ரேலுக்கு அனுமதி மறுப்பு
Saudi Arabia turned down Israeli request to allow its planes to pick up Israeli passengers: சவுதியில் தரையிறங்கிய விமானத்திலிருந்த பயணிகளை ஏற்றிச் செல்ல, இஸ்ரேல் விமானங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இஸ்ரேலுக்குச் சென்றுகொண்டிருந்த விமானத்தின் விமானிகளில் ஒருவர், தனது சக விமானியைக் கத்தியால் குத்தியதுடன், விமானத்தை மோதச் செய்யவும் முயன்ற விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

அதிர்ச்சியை ஏற்படுத்திய அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, flydubai நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம், சவுதி அரேபியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இஸ்ரேல் விமானங்களுக்கு அனுமதி மறுப்பு
இந்நிலையில், அந்த விமானத்திலிருந்த இஸ்ரேல் பயணிகளை மீண்டும் தன் நாட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக, சவுதிக்கு தன் போர் விமானங்களை அனுப்ப இஸ்ரேல் தயாராகியுள்ளது.

தன் நாட்டு மக்களை சவுதியிலிருந்து இஸ்ரேலுக்கு அழைத்துவருவதற்காக, தன் நாட்டு போர் விமானங்களை அனுமதிக்குமாறு இஸ்ரேல், சவுதி அரசிடம் கோரியுள்ளது.
ஆனால், இஸ்ரேல் தனது போர் விமானங்களை சவுதிக்கு கொண்டு வர, சவுதி அரசு அனுமதி மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆகவே, சம்பந்தப்பட்ட விமானத்தில் பயணித்த இஸ்ரேல் மக்கள், flydubai விமானத்திலேயே இஸ்ரேல் திரும்பியுள்ளனர்.
இஸ்ரேலுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையில் தூதரக உறவுகள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.