மெக்கா மசூதிக்குள் ஒழுக்கக்கேடான செயல் - 2 வங்காள தேசத்தினரை தூக்கிலிட்ட சவுதி அரேபியா
Saudi Executes Bangladeshis in Mecca Mosque: சவுதி அரேபியாவில் இரு வங்காள தேச குடிமக்கள் தூக்கிலிடப்பட்டனர்.
மசூதிக்குள் ஒழுக்கமற்ற செயல்
சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, மெக்கா மசூதிக்குள் “ஒழுக்கமற்ற செயல்” செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இரு வங்காளதேச குடிமக்கள் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வங்காள தேச தூதரகம் (ஜெட்டா) முன்கூட்டியே எந்த அறிவிப்பும் பெறவில்லை என்று தெரிவித்துள்ளது.
தூதரகம் சவுதி வெளிநாட்டு அமைச்சகத்திடம் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெற “note verbale” எனப்படும் தூதரகக் கடிதத்தை சமர்ப்பித்துள்ளது.
தூக்கிலிடப்பட்டவர்கள் நசெருல் இஸ்லாம் அப்துல் பசீர் மற்றும் சிதி அக்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சவுதி பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை கைது செய்து, விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றம் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, இருவருக்கும் மரண தண்டனை விதித்தது.
இந்த தண்டனை ta’zir எனப்படும் இஸ்லாமிய சட்டத்தின் கீழ் discretionary punishment (அதிகாரிகளின் விருப்பப்படி வழங்கப்படும் தண்டனை) ஆகும்.
அமைச்சகம், “இச்செயல் நடைபெற்ற இடத்தின் புனிதத்தன்மை மற்றும் காலத்தின் புனிதத்தன்மையை மீறியதால் கடுமையான தண்டனை வழங்கப்பட்டது” என்று விளக்கமளித்துள்ளது. இருப்பினும், அவர்கள் பள்ளிவாசலில் என்ன செய்தார்கள் என்பது குறித்து சவுதி அதிகாரிகள் எந்த விவரங்களையும் வெளியிடவில்லை.
சம்பவம் நடந்த பள்ளிவாசலின் பெயர் அல்லது கைது செய்யப்பட்ட நேரம் பற்றிய தகவலும் வெளிப்படுத்தப்படவில்லை. இந்த சம்பவம், சவுதி அரேபியாவில் சட்டம் மற்றும் ஒழுக்க விதிகள் மீறப்பட்டால் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவதை மீண்டும் வலியுறுத்துகிறது.
அதேசமயம், தூதரகங்களுக்கு முன்கூட்டியே தகவல் வழங்கப்படாதது, சர்வதேச உறவுகளில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என வங்காளதேச அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |