மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த சிலை... கோபத்தில் கால்பந்து ஆட்டத்தை ரத்து செய்த சவுதி அரேபியா
திங்களன்று நடக்கவிருந்த சவுதி அரேபிய அணி Al Ittihad மற்றும் ஈரானின் செபஹான் அணி இடையேயான போட்டி திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட தளபதி
சவுதி அரேபிய அணி களமிறங்க மறுத்துள்ளதை அடுத்தே, ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவித்துள்ளனர். அமெரிக்காவால் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்லாமிய புரட்சிகர காவலர் அமைப்பின் தளபதியான காசிம் சுலைமானியின் சிலை மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே சவுதி அரேபிய அணி களமிறங்க மறுத்துள்ளது.
@twitter
ஈரானின் Naghsh-e Jahan மைதானத்தில் செபஹான் மற்றும் அல் இட்டிஹாட் அணிகளுக்கு இடையிலான ஆசிய சேம்பியன்ஸ் லீக் போட்டியைக் காண சுமார் 60,000 ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
ஆட்டத்திற்கு மறுத்த சவுதி
இந்த நிலையிலேயே கொல்லப்பட்ட தளபதியான காசிம் சுலைமானியின் சிலை மைதானத்தில் வைக்கப்பட்டிருந்தது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
@twitter
சிலை மற்றும் பதாகைகளை அகற்ற ஈரான் தரப்பு மறுத்துள்ளது. இதனையடுத்தே சவுதி அரேபிய அணி களமிறங்க மறுத்துள்ளது. இதனிடையே, ஆட்டத்திற்கு மறுத்த சவுதி அணிக்கு எதிராக புகாரளிக்க இருப்பதாக ஈரான் அணி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆனால் சவுதி அணி ஏன் களமிறங்க மறுத்தது என்பதை அவர்கள் குறிப்பிடவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |