சவுதி எண்ணெய் வயல்களை குறிவைத்த டிரோன்கள்: ஈரான் வான்வழி தாக்குதல் முறியடிப்பு
சவுதி அரேபியாவின் எண்ணெய் கிணறுகளை குறிவைத்து ஏவப்பட்ட வான்வழித் தாக்குதலை முறியடித்து இருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
சவுதி எண்ணெய் வயல்கள் மீது தாக்குதல்
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்றங்கள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சவுதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் வயல்கள் மற்றும் ராணுவ தளங்கள் மீது ஈரான் முன்னெடுத்த மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்து இருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சவுதி அரேபியாவின் எல்லைக்கு அருகில் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ருப் அலி காலி பாலைவனப் பகுதியில் ஷைபா எண்ணெய் வயல்கள் உள்ளன. இந்த எண்ணெய் வயல்களை குறிவைத்து ஈரான் ஏவிய 6 டிரோன்களையும் சவுதி இராணுவ படையினர் நடுவானிலேயே சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளனர்.
குறிவைக்கப்பட்ட சூப்பர் ஜெயண்ட் எண்ணெய் வயல் உலக எரிசக்தி சந்தையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இராணுவ தளத்தின் மீது தாக்குதல்
அத்துடன் அமெரிக்க வீரர்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ள இராணுவ தளங்கள் மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தலைநகர் ரியாத்திற்கு தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இளவரசர் சுல்தான் விமானப்படை தளத்தை பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்று குறிவைத்த நிலையில், அதனையும் சவுதி நாட்டு படையினர் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |