ரொனால்டோவை திணறடித்த எதிரணி வீரர்கள்: அல் நஸர் தொடரிலிருந்து வெளியேறியதால் அதிர்ச்சி
சவுதி சூப்பர் கோப்பை கால்பந்து தொடரில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடிக்க தவறியதை அடுத்து அவரது தலைமையிலான அல் நஸர் அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
கோலடிக்க தவறிய ரொனால்டோ
சவுதி சூப்பர் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அல் நஸர் அணியை போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமை தாங்கினார்.
173 மில்லியன் மதிப்புள்ள புதிய ஒப்பந்தத்துடன் சவுதி அரேபியாவின் அல் நஸர் கிளப்பில் இணைந்துள்ள நட்சத்திர வீரர் ரொனால்டோவுக்கு இது இரண்டாவது போட்டியாகும், அல்-எட்டிஃபாக் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ரொனால்டோ கோல் அடிக்க தவறி இருந்த நிலையில், அல் இட்டிஹாட் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் ரொனால்டோ கோல் அடிக்க தவறினார்.
Cristiano Ronaldo ?pic.twitter.com/2t8rciSWqF
— CristianoXtra (@CristianoXtra_) January 26, 2023
அல் இட்டிஹாட் அணியின் வீரர் ரொமரின்ஹோ அடித்த கோலை சமன் செய்வதற்கான வாய்ப்பு நட்சத்திர வீரர் ரொனால்டோவுக்கு கிடைத்தும் அதை அவர் தவறவிட்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் இந்த போட்டியில் ரொனால்டோ கோல் அடிக்க சில வாய்ப்புகள் கிடைத்தும், அல் இட்டிஹாட் அணியின் தடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு ரொனால்டோவின் தாக்குதல் ஆட்டத்தை தடுத்து நிறுத்தினர்.
வெளியேறிய அல் நஸர்
சவுதி அரேபியாவின் ரியாத்தில் வியாழக்கிழமை அல் நஸர் மற்றும் அல் இட்டிஹாட் இடையே நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நஸர் 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததை அடுத்து, சவுதி சூப்பர் கோப்பையில் இருந்து அல் நஸர் அணி வெளியேறியது.
இந்த போட்டியில் அல் நஸர் அணி சார்பாக 67வது நிமிடத்தில் ஆண்டர்சன் தலிஸ்கா மட்டும் ஒரு கோல் அடித்து இருந்தார்.
இதையடுத்து சவுதி ப்ரோ லீக்கில் பிப்ரவரி 3ம் திகதி ரொனால்டோ தலைமையிலான அல் நஸர் அணி அல் ஃபதே அணியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.