கேரள செவிலியர் வழக்கு: உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள செய்தி
ஏமன் நாட்டவர் ஒருவரைக் கொலை செய்ததாக மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள செவிலியர் ஒருவரது தண்டனை தள்ளிவைக்கப்பட்டுள்ள விடயம் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், அந்த வழக்கு தொடர்பில் இந்திய உச்சநீதிமன்றம் தனது கருத்தைத் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் கருத்து
கேரள செவிலியரான நிமிஷா பிரியாவை மீட்கும் முயற்சியில், அவரது தாய் உட்பட சில நபர்களைக் கொண்ட 'Save Nimisha Priya Organisation' என்னும் அமைப்பு ஈடுபட்டுவருகிறது.
அந்த அமைப்புதான் நிமிஷா விவகாரத்தில் இந்திய அரசு தலையிட வலியுறுத்துமாறு இந்திய உச்சநீதிமன்றத்தைக் கோரி புகார் மனு அளித்தது.
இந்நிலையில், ஏமன் நாட்டுக்குப் பயணிக்க அனுமதிக்கக் கோரி மத்திய அரசை அணுகுமாறு உச்சநீதிமன்றம் அந்த அமைப்பை வலியுறுத்தியுள்ளது.
Court allows petitioner to seek Centre’s nod for travel to Yemen to negotiate blood money for Indian nurse Nimisha Priya, whose execution has been stayed until further notice@SukritiMishra12
— LawBeat (@LawBeatInd) July 18, 2025
Read more: https://t.co/5mT7SL3pfr pic.twitter.com/zNciB0Nh3O
மேலும், நிமிஷாவின் வழக்கைப் பொருத்தவரையில், இந்திய அரசு தன்னாலான நல்ல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அத்துடன், நிமிஷா தொடர்பான வழக்கை ஆகத்து மாதம் 14ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |