உலகையே மிரட்டும் டிரம்பிற்கு இந்த நோயா? என்னவென்று தெரியுமா?
79 வயதான டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபராக பதவி வகித்து வருகிறார்.
டிரம்பின் சமீபத்திய புகைப்படங்களில், கணுக்கால் வீக்கம் மற்றும் கையில் காயம் இருப்பது விவாதமான நிலையில், வெள்ளை மாளிகை அவருக்கு விரிவான மருத்துவ பரிசோதனை நடத்தியது.
டிரம்ப்பிற்கு CVF நோய்
இந்த பரிசோதனையில், அவருக்கு க்ரானிக் வெனஸ் இன்சஃபிசியன்ஸி (CVF - Chronic Venous Insufficiency ) என்ற நரம்பியல் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், "ட்ரம்பிற்கு ஆழமான நரம்பு ரத்த உறைவு சிக்கல் இல்லை, இதய செயல்பாடு சாதாரணமாகவே உள்ளது. இந்த பாதிப்பானது ஒரு நீண்டகால உடல்நலப் பிரச்சினையாக இருந்தாலும், உடல் செயல்பாடுகளை கடுமையாக கட்டுப்படுத்தாது.
அதேநேரம், அடிக்கடி பொது இடங்களில் கைகுலுக்குவது மற்றும் வழக்கமான ஆஸ்பிரின் பயன்பாடு காரணமாக டிரம்பின் கையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chronic Venous Insufficiency
கால்களில் உள்ள நரம்புகள் இதயத்திற்கு ரத்தத்தை மீண்டும் திறம்பட அனுப்ப முடியாதபோது இந்த பாதிப்பு ஏற்படுகிறது. நாளடைவில், இது கீழ் மூட்டுகளில் ரத்தம் தேங்கி, வீக்கம், வலி போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது.
நரம்புகளுக்கு ஏற்படும் சேதம் நிரந்தரமானது என்றாலும், இந்த நிலை உயிருக்கு ஆபத்தானது இல்லை. உடற்பயிற்சி மற்றும் மருந்துகள் உள்ளிட்ட சரியான சிகிச்சை மூலம், அறிகுறிகளை நிர்வகிக்க முடியும்.
உலகில் 20 பேரில் ஒருவருக்கு இந்த பாதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பாதிப்பு பெரும்பாலும், 50 வயதை தாண்டியவர்களுக்கே ஏற்படுகிறது. மேலும், நீண்ட நேரம் நிற்பது அல்லது உட்காருவது, உடல் பருமன் உள்ளவர்கள் ஆகியோருக்கும், இந்த நோய் தாக்கும் அபாயம் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |