காண்ட்ராக்ட் கில்லர்... பிரான்சில் இணையத்தில் உலாவரும் ஒரு மோசடி: எச்சரிக்கை
பிரான்சில் காண்ட்ராக்ட் கில்லர் மோசடி என்னும் ஒரு மோசடி இணையத்தில் உலாவருவது குறித்து, பிரான்ஸ் சைபர் கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த காண்ட்ராக்ட் கில்லர் மோசடி என்பது என்ன?
நீங்கள் உங்கள் மின்னஞ்சலைத் திறந்தால், அதில் உங்களைக் கொலை செய்ய தான் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், நீங்கள் பணம் கொடுத்தால் உங்களை விட்டுவிடுவதாகவும் ஒருவர் கூறும் மின்னஞ்சல்கள் பிரான்சில் உலாவருகின்றன.
இது வேடிக்கையோ, விளையாட்டோ அல்ல, என துவங்கும் இந்த மின்னஞ்சல்கள், மின்னஞ்சலை அனுப்புபவர் பெயர் Death Angel - l’ange de la mort என்றும், உங்களை கொலை தனக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டிருக்கும்.
48 மணி நேரத்திற்குள் நீங்கள் பதிலளிக்கவேண்டும் என உங்களை மிரட்டும் அந்த நபர், உங்களைத் தான் கண்காணித்துக்கொண்டே இருப்பதாகவும், ஆகவே, பொலிசாரிடம் செல்லவேண்டாம் என்றும் எச்சரித்தாலும், பணம் கொடுத்தால் உங்களை விட்டுவிடுவதாக கூறியிருப்பார்.
பயப்படவேண்டாம்
இது ஒருவகை மோசடிதான். நீங்கள் அந்த மின்னஞ்சலுக்கு பதிலளித்தால், அந்த நபர் உங்களை மிரட்டி பணம் பறிக்க முயலக்கூடும்.
ஆகவே, இப்படி ஒரு மின்னஞ்சல் வந்தால் பயப்படவேண்டாம். பிரான்சில் ஆயிரக்கணக்கானோருக்கு இத்தகைய மின்னஞ்சல்கள் அனுப்பட்டுவருகின்றன.
அதற்கு பதிலளிக்கவும் வேண்டாம். அப்படி பதிலளித்தால், எதிர்காலத்திலும் நீங்கள் மோசடிகளில் சிக்கக்கூடும் என்கிறது பிரான்ஸ் சைபர் கண்காணிப்பு அமைப்பு.
அப்படி ஒரு மின்னஞ்சல் உங்களுக்கு வந்தால், உடனடியாக அதை Signal Spam என்னும் spam குறித்து புகார் தெரிவிக்கும் இணையதளத்துக்கு தகவல் கொடுங்கள்.
கடைசியாக, மோசடி இணையதள விடயங்கள் குறித்து புகார் தெரிவிக்கும் பிரான்ஸ் அரசின் PHAROS என்னும் இணையதளத்துக்கு புகார் தெரிவியுங்கள் என்கிறது பிரான்ஸ் சைபர் கண்காணிப்பு அமைப்பு.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |