பட்டப்பகலில் பள்ளி ஆசிரியையை படுகொலை செய்த மாணவர்
ரஷ்யாவில், நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை ஒருவரை மாணவர் ஒருவர் பட்டப்பகலில் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
பள்ளி ஆசிரியையை படுகொலை செய்த மாணவர்
ரஷ்யாவிலுள்ள Dobryanka என்னுமிடத்தில் அமைந்துள்ள பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்துவந்தவர் Olesya Baguta (55).

திங்கட்கிழமை காலை வழக்கம்போல Olesya பள்ளிக்கு பணிக்கு வந்த நிலையில், அவருக்காக தயாராக காத்திருந்த Matvey என்னும் மாணவர் Olesyaவைக் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.
படுகாயமடைந்த Olesyaவை ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையிலும், சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டதாக நகர ஆளுநரான Dmitry Makhonin என்பவர் தெரிவித்துள்ளார்.

Matvey கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஆசிரியை மீதான வன்மம் காரணமாக அவரைக் கொலை செய்ததாக கூறப்படும் நிலையில், ஏற்கனவே அவர் Olesyaவை மிரட்டியுள்ளார் என்றும், ஆனால், அதை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
Olesya, 2018ஆம் ஆண்டு நல்லாசிரியை விருது பெற்றவர் ஆவார். அத்துடன், அவர் மாணவர்கள் மத்தியில் பிரபலமானவர் என்றும் கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |