வீட்டிற்குள் ஊடுருவ முயற்சி: துணிந்து சண்டையிட்ட பள்ளி மாணவி: சோகத்தில் மூழ்கிய வேல்ஸ்
வேல்ஸின் பிளாக்வுட் பகுதியில் 17 வயது சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸார் கொலை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பறிப்போன பள்ளி சிறுமி உயிர்
வியாழக்கிழமை காலை 7.15 மணிக்கு செஃப்ன் ஃபாரஸ்ட்(Cefn Fforest) பகுதியில் உள்ள சொத்து ஒன்றில் நடந்த அத்துமீறல் தாக்குதலில் 17 வயது பள்ளி சிறுமி லேனி வில்லியம்ஸ்(Lainie William) கொல்லப்பட்டுள்ளார்.

குடும்பத்தினரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற நபருடன் நடந்த மோதலின் போது லேனி வில்லியம்ஸ் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் இந்த மோதலின் போது லேனி வில்லியம்ஸ் தன்னுடைய 8 வயது சகோதரனை படுக்கைக்கு கீழ் சென்று ஒளிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த சம்பவத்தில் 38 வயதான தாய் ரியான் ஸ்டீபன்ஸ் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

18 வயது இளைஞர் கைது
லேனி வில்லியம்ஸ் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் லேனி வில்லியம்ஸ்க்கு அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உணர்வுபூர்வமான அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதில் தொடர்புடையவராக கருதப்படும் நியூபிரிட்ஜ் பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர் தற்போது விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வேறு யாரையும் தேடவில்லை என்று க்வென்ட் (Gwent) காவல்துறை தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |