$300 மில்லியன் இராணுவ ஒப்பந்தம்! ஆசிய நாடொன்றிக்கு அமெரிக்க நீட்டிய உதவிக்கரம்
தைவானுடனான $300 மில்லியன் ராணுவ ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது.
$300 மில்லியன் ஒப்பந்தம்
தைவானுக்கு போர் விமானங்கள் மற்றும் பிற விமானங்களுக்கான உதிரி பாகங்களை விற்பனை செய்யும் ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது.
$300 மில்லியன் டொலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

F-16, C-130 மற்றும் பிற இராணுவ விமானங்களுக்கான தயார் நிலையை உறுதிப்படுத்துவதற்கும், ஒப்பந்த பெறுநரின் தற்கால மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களை சமாளிக்கும் திறனை வலுப்படுத்துவதுமே இந்த இராணுவ விற்பனை ஒப்பந்தத்தின் நோக்கம் என்று பென்டகன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் ஒப்புதலுக்கு தைபே பாராட்டுகளை தெரிவித்து இருக்கும் அதே நேரத்தில், சீனா கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.

இராணுவ ஒப்பந்த ஒப்புதல் குறித்து தைவான் ஜனாதிபதி அலுவலக செய்தி தொடர்பாளர் கரேன் குவோ வெளியிட்ட அறிக்கையில், தைவான் - அமெரிக்காவின் உறவு பாதுகாப்பு துறையில் பலமடைவது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு முக்கிய அடித்தளமாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |