பிரபல ஐரோப்பிய நாட்டில் மீண்டும் பள்ளிகள், உணவகங்கள் மற்றும் கடைகள் மூடல்? கசிந்த முக்கிய தகவல்
கொரோனா வைரஸ் தொற்றின் புதிய அலையால் மருத்துவமனைகளை நெருக்கடிக்குள்ளாக்குவதால் நாட்டின் பெரும்பாலான பள்ளிகள், உணவகங்கள் மற்றும் கடைகளை மூடுவதாக இத்தாலி அரசாங்கம் வெள்ளிக்கிழமை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தாலிக்கான புதிய கட்டுப்பாடுகளை தீர்மானிக்க பிரதமர் Mario Draghi அதிகாலையில் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தவுள்ளார்.
இத்தாலியில் வியாழக்கிழமை கிட்டத்தட்ட 26,000 புதிய தொற்றுகளும், 373 இறப்புகளும் பதிவானது.
ஒரு வருடத்திற்கு முன்னர் நாட்டில் தொற்றுநோய் பரவியதில் இருந்து 1,00,000 க்கும் மேற்பட்ட மக்கள் இத்தாலியில் இறந்துவிட்டனர்.
கொரேனா காரணமாக இது ஒரு மாத கால ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிக மோசமான பொருளாதார மந்தநிலையைத் தூண்டியது.
இப்போது புதிய தீவிரமான மாறுபட்ட வைரஸ் பரவுவதால்,
இத்தாலியின் அதிக மக்கள் தொகை கொண்ட வடக்குப் பகுதிகளான Lombardy உட்பட பல பகுதிகள், தெற்கில் Calabria-வும் திங்கள்கிழமை முதல் அதிக ஆபத்து சிவப்பு மண்டலங்கள் என அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
நிலைமை நிச்சயமற்றதாக இருந்தாலும், ரோமையும் உள்ளடக்கிய பிராந்தியமான Lazio-வும் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.