கார் பந்தய ஜாம்பவான் வீட்டில் செவிலியருக்கு நடந்த கொடுமை... அடையாளம் காணப்பட்ட பிரபலம்
முன்னாள் F1 உலக சாம்பியன் மைக்கேல் ஷூமேக்கரின் குடியிருப்பில் செவிலியர் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் பிரபல கார் பந்தய சாரதி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
துஸ்பிரயோகம்
அவுஸ்திரேலிய கார் பந்தய சாரதியான Joey Mawson என்பவரே மைக்கேல் ஷூமேக்கரை கவனித்து வந்த செவிலியரை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார். ஜெனீவா அருகில் கிளாண்ட் பகுதியில் அமைந்துள்ள மைக்கேல் ஷூமேக்கரின் மாளிகையில் வைத்தே தொடர்புடைய செவிலியர் தாக்கப்பட்டுள்ளார்.
ஆனால், 29 வயதான மவ்சன் தன்மீதான குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை சுவிட்சர்லாந்தின் நியான் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட நிலையில், மவ்சன் கலந்துகொள்ளவில்லை.
குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணையின் போது கலந்துகொள்ளாத நிலையில், வழக்கு மறு திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அமர்வு ஒரு மணி நேரம் விவாதித்து, ஒத்திவைப்புக்கு ஒப்புக்கொண்டனர்.
மேலும், அவுஸ்திரேலியாவுடன் சுவிட்சர்லாந்து நாடுகடத்தல் ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளதால், குற்றம் சாட்டப்பட்டுள்ள மவ்சன் தொழில்நுட்ப ரீதியாக ஐரோப்பாவிற்கு பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.
மவ்சன், ஷூமேக்கரின் மகன் மிக் ஷூமேக்கரின் நெருங்கிய நண்பராவார். மவ்சன் மீது வழக்குத் தொடர்ந்துள்ள செவிலியர், 2013ல் விபத்தில் சிக்கி கோமாவில் இருக்கும் ஷூமேக்கருக்கு உதவி வழங்கும் மருத்துவக் குழுவில் ஒருவராக இருந்தார்.
ஷூமேக்கர் குடும்பம்
ஆனால், 30 வயது கடந்த அந்த செவிலியரின் ஒப்புதலுடனே உறவு வைத்துக் கொண்டதாக மவ்சன் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, இருவருக்கும் இடையேயான குறுந்தகவல் அதை நிரூபிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செவிலியரை ஷூமேக்கர் குடும்பம் வேலையில் இருந்து நீக்கியதன் பின்னரே, சம்பவம் நடந்து 2 ஆண்டுகள் கடந்து அவர் புகார் அளித்துள்ளதாகவும் மவ்சன் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் இருந்து அடிக்கடி விமான பயணத்தை தவிர்க்க, பந்தயம் நடக்கும் நாட்களில் ஷூமேக்கரின் குடியிருப்பில் தங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார் மவ்சன்.
மேலும், 2022 ஜனவரி வரையில் பாதிக்கப்பட்ட செவிலியர் மவ்சன் மீது புகார் ஏதும் அளிக்கவில்லை என்றே கூறப்படுகிறது. 2019 நவம்பர் மாதம் 23ம் திகதி தம்மை துஸ்பிரயோகம் செய்துள்ளதாகவே மவ்சன் மீது குறித்த செவிலியர் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |