இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பூச்சியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்
அவுஸ்திரேலியாவின் மழைக்காடுகளில் மிகப்பெரிய பூச்சி ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மிகப்பெரிய பூச்சி கண்டுபிடிப்பு
விஞ்ஞானிகள் தொடர்ந்து புது விதமான விடயங்களை கண்டுபிடித்து வருவது அனைவருக்கும் தெரிந்தது தான். அந்த வரிசையில் தற்போது அவர்கள் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பூச்சியை கண்டுபிடித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் வடகிழக்கில் உள்ள ஃபார் நார்த் குயின்ஸ்லாந்தின் தொலைதூர மழைக்காடுகளில் ஒரு புதிய வகை குச்சிப் பூச்சியை (stick insect) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது இதுவரை காணாத அளவுக்கு மிகப்பெரிய பூச்சி என்று அவர்கள் கூறுகிறார்கள்.
கோல்ஃப் பந்தைப் போன்று இருக்கும் இந்த பூச்சி இனமானது 4 கிராம் (1.55 அவுன்ஸ்) எடையும், 40 செ.மீ (15.75 அங்குலம்) நீளமும் கொண்டது.
இந்த புதிய இனத்தை அடையாளம் காண்பதற்கு உதவிய ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆங்கஸ் எம்மாட் கூறுகையில், "இந்த பூச்சியின் பெரிய அளவானது குளிர் மற்றும் ஈரமான வாழ்விடத்திற்கு பரிணாம வளர்ச்சியின் பிரதிபலிப்பாக இருக்கலாம்.
மேலும், இந்த குச்சிப் பூச்சியின் தனித்துவமான முட்டைகள் விஞ்ஞானிகளுக்கு அதனை ஒரு புதிய இனமாக அடையாளம் காண உதவியது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |