பிரேசிலில் புதிய டைனோசர் இனம் கண்டுபிடிப்பு: சிறிய மாமிச உண்ணி என விஞ்ஞானிகள் அறிவிப்பு
பிரேசிலின் அரராகுவாரா நகரில் புதிய டைனோசர் இனம் உயிர் வாழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதிய டைனோசர் இனம் கண்டுபிடிப்பு
உலகில் டைனோசர் என்ற மிகப்பெரிய மாமிச உண்ணி வாழ்ந்ததற்கான பல்வேறு புதைப்படிவங்கள் நமக்கு தொடர்ந்து கிடைத்த வண்ணம் உள்ளன.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிவங்கள் மற்றும் வரலாற்று தடயங்கள் மூலம் உலகில் பல வகையான டைனோசர் இனங்கள் உயிர் வாழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிரேசிலின் அரராகுவாரா நகரில் டைனோசரின் புதிய கால் தடங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் இந்த காலடி தடங்கள் மூலம் விஞ்ஞானிகள் புதிய டைனோசர் இனம் ஒன்றையும் கண்டுபிடித்துள்ளனர்.
விஞ்ஞானிகளின் ஆய்வின் அடிப்படையில், பார்லோவிச்னஸ் ரேபிடஸ் என்று அழைக்கப்படும் புதிய டைனோசர் இனம் உயிர் வாழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிறிய வேகமான மாமிச விலங்கான இந்த டைனோசர் 60 முதல் 90 செ.மீ. (அதாவது 2 முதல் 3 அடி) உயரம் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்லோவிச்னஸ் ரேபிடஸ் என்ற இந்த டைனோசர் இனம் கிட்டத்தட்ட 12.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உயிர் வாழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |