30 வருடத்திற்கு முன் திருடப்பட்ட கைப்பை: 11 வயது பிரித்தானிய சிறுமி செய்த நெகிழ்ச்சி செயல்
30 வருடத்திற்கு முன் திருடப்பட்ட கைப்பை-ஐ உரிமையாளரிடம் சிறுமி ஒருவர் சேர்த்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்றங்கரையில் கிடைத்த கைப்பை
பிரித்தானியாவின் ஸ்காட்லாந்தை சேர்ந்த மெய்சி கூட்ஸ் என்ற 11 வயது சிறுமி தன்னுடைய நாய் மற்றும் பெற்றோருடன் டான் ஆற்றங்கரையோரமாக நடந்து சென்றுள்ளார்.
அப்போது கரை ஒதுங்கிய பை ஒன்றை கண்டுபிடித்த சிறுமி, அதில் பேனா, சில்லறை நாணயங்கள், உதட்டு சாயம், சாவி, மாத்திரைகள் மற்றும் ஆபரணங்கள் இருப்பதை பார்த்துள்ளார்.
மேலும் அந்த கைப்பையில் 1993ம் வருடம் குறிப்பிடப்பட்ட சில கிரெடிட் கார்டுகளும் இருந்துள்ளது.
இதையடுத்து பையின் மேலே உள்ள அடையாளங்கள் மற்றும் அதில் இருந்த சில பொருட்களை வைத்து சமூக ஊடகங்களில் கைப்பையின் உரிமையாளரை தேடும் பணியில் 11 வயது மெய்சி கூட்ஸ் இறங்கியுள்ளார்.
30 வருடத்திற்கு பிறகு கிடைத்த கைப்பை
11 வயது சிறுமி தனது நீண்ட தேடலுக்கு பிறகு, ஒருவழியாக கைப்பையின் உரிமையாளரான ஆட்ரி-யிடம் கைப்பையை சிறுமி ஒப்படைத்தார்.
இது தொடர்பாக கைப்பையின் உரிமையாளரான ஆட்ரி பேசிய போது, நான் இதனை எதிர்பார்க்கவே இல்லை, இத்தனை வருடங்களுக்கு பிறகும் பை அப்படியே உள்ளது என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் சமூக வலைதளத்தின் தாக்கம் நம்ப முடியாத அளவு இருப்பதாக சிறுமியின் தாயார் ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்பு தற்போது 81 வயதுடைய ஆட்ரி ஹே என்பவரின் கைப்பை திருடப்பட்டுள்ளது.
அப்போது அந்த கைப்பையில் 200 பவுண்ட் பணம் இருந்துள்ளது, அதனை எடுத்துவிட்டு திருடன் கைப்பையை டான் நதியில் வீசி விட்டு சென்றுள்ளார்.
அப்போது இது தொடர்பாக பொலிஸில் புகார் அளித்தும், காவல்துறையினரால் அப்போது அதை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
handbag, stolen handbag, Audrey Hay, Aberdeen, River Don, £200, Maisie Coutts, unexpected reunion,