ட்ரம்பின் உடல் நிலை மோசமடைகிறதா? ஸ்கொட்லாந்தில் அவரது நடவடிக்கைகளில் மர்மம்
ஜனாதிபதி ட்ரம்பின் மர்மமான காயங்கள் தொடர்பில் வெள்ளை மாளிகை விளக்கமளித்த சில வாரங்களில், ஸ்கொட்லாந்தில் மீண்டும் அதே காயங்களை மூடி மறைத்த நிலையில் அவர் காணப்பட்டுள்ளார்.
ஆஸ்பிரின் பயன்பாடு
ஜனாதிபதி ட்ரம்பின் கையில் காணப்படும் மர்மமான சிராய்ப்பு தொடர்பில் பிப்ரவரி மாதமே தகவல் வெளியானது. அத்துடன் இந்த மாத தொடக்கத்தில் அந்த சிராய்ப்பு தொடர்பில் வெள்ளை மாளிகை விளக்கமளித்திருந்தது.
அதில், அடிக்கடி கைகுலுக்கல் மற்றும் ஆஸ்பிரின் பயன்பாடு காரணமாக ஏற்படும் லேசான மென்மையான திசு எரிச்சல் என்றே கூறப்பட்டது. மட்டுமின்றி அதிகமான ஆஸ்பிரின் பயன்பாடு காரணமாக அதன் பக்கவிளைவு என்றும் விளக்கமளிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ஜனாதிபதி ட்ரம்ப் ஸ்கொட்லாந்தில் தங்கி வருகிறார். அத்துடன் பிரித்தானியப் பிரதமர் ஸ்டார்மர் உட்பட முதன்மையான பல தலைவர்களையும் சந்தித்து வருகிறார்.
கால் வீக்கம்
இந்த சந்திப்புகளின் போது அவரது கையில் காணப்படும் சிராய்ப்புகளை அவர் வண்ணப்பூச்சுகளால் மூடி மறைத்து வருகிறார் என்றே கூறுகின்றனர். இந்த மாத தொடக்கத்தில் கால் வீக்கம் காரணமாக மருத்துவ சோதனைக்கு ட்ரம்ப் உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதில் அவருக்கு நாள்பட்ட சிரை பற்றாக்குறை இருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த கால் வீக்கம் கடந்த மாதம் முழுவதும் காணப்பட்ட நிலையில் அவரது உடல் நிலை தொடர்பில் கவலை எழுந்தது.
தற்போது, கைகளில் சிராய்ப்புடன் ட்ரம்ப் காணப்படுவது அவரது உடல் நிலை குறித்த புதிய சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் 78 வயதான ட்ரம்ப் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாகவே வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |